சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது, உலகம் முழுவதும் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அதேபோல், திரையுலகினர், அரசியல் பிரபலங்களும் தங்களது சமூக வலைதளங்கள் மூலம் ரஜினிக்கு வாழ்த்துகளை தெரிவிக்கின்றனர். மேலும், ரஜினியின் பிறந்தநாள் குறித்த ஹேஷ்டேக்குகள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ரஜினியின் வீட்டிற்கு வெளியே வந்த அவருடைய மனைவி லதா ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “ரஜினிகாந்த் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் அவர் சார்பாகவும், எங்கள் குடும்பத்தின் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகம் முழுவதும் இருக்கும் ரசிகர்கள் எங்களுடைய குடும்பம் போன்றவர்கள். அவர்களுடைய அன்புக்கு நாங்கள் கட்டுப்பட்டவர்கள். எங்கள் குடும்பம் அவர்களுக்கு கடமைப்பட்டிருக்கிறது. வாழ்த்து தெரிவித்துள்ள அனைவருக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பாக மீண்டும் ஒருமுறை நன்றியை தெரிவித்து கொள்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.

