உலகம்

சிரியாவில் தீவிரவாத தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் பலி: ‘பதிலடி கொடுப்போம்’ என டிரம்ப் சூளுரை

சிரியாவில் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் அமெரிக்க ராணுவ வீரர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் மத்திய சிரியாவில் உள்ள பால்மைரா நகருக்கு அருகே உள்ள ராணுவ முகாம் மீது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தினார். இதில் 2 அமெரிக்க ராணுவ வீரர்கள், ஒரு அமெரிக்க உரைபெயர்ப்பாளர் என 3 அமெரிக்கர்கள் பலியானார்கள். 3 பேர் காயம் அடைந்தனர். இதையடுத்து துப்பாக்கி சூடு நடத்திய நபரை மற்ற அமெரிக்க ராணுவ வீரர்கள் சுட்டுக்கொன்றனர்.

இந்த தாக்குதலை ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்த நபர் நடத்தியதாகவும், அவர் கொல்லப்பட்டதாகவும் அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு தெரிவித்தது. இதற்கிடையே இந்தத் தாக்குதலுக்கு மிகக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் கூறும்போது, “சிரியாவில் அரசாங்கத்தின் முழுமையான கட்டுப்பாட்டில் இல்லாத ஒரு ஆபத்தான பகுதியில் ஐ.எஸ் நடத்திய தாக்குதல் இதுவாகும். இதற்கு தக்க பதிலடி கொடுப்போம். இந்தச் சம்பவத்தால் சிரிய அதிபர் அகமது அல்-ஷாரா அதிர்ச்சியும் கோபமும் அடைந்துள்ளார். சிரியா அமெரிக்கப் படைகளுடன் இணைந்து போராடி வருகிறது” என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம்

அமெரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதி டிக் செனி மறைவு

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் டிக் செனி.(84) இவர் அமெரிக்காவின் 46வது துணை ஜனாதிபதி ஆவார். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இவர் 2001 முதல் 2009-ம்
உலகம்

செய்யாத குற்றத்திற்காக 43 ஆண்டுகள் சிறையில் இருந்த இந்திய வம்சாவளி நபரின் நாடுகடத்தல் நிறுத்திவைப்பு

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 64 வயதான சுப்பிரமணியம் வேதம், தனது நண்பரைக் கொலை செய்ததாக குற்றம்சட்டப்பட்ட வழக்கில் 1980 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்றார். எந்த