இந்தியா

உதயநிதி என்னை விட டேஞ்சர்!.. மேடையில் தெறிக்கவிட்ட ஸ்டாலின்..

திருவண்ணாமலையில் நடந்த திமுக இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பில் முதல்வர், துணை முதல்வர் உதயநிதி, துரைமுருகன், ஆ ராசா உள்ளிட்ட பல திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

கட்சிக்கு என்ன தேவை என்பதை புரிந்து செயல்பட்டு வருகிறார் உதயநிதி. லட்சக்கணக்கான இளைஞர்களை கட்சியில் சேர்த்திருக்கிறார். கொள்கை ரீதியாக வலுவாக்க பல பாசறை கூட்டங்களையும் அவர் நடத்தி இருக்கிறார். அவருக்கு என் பாராட்டு.

உதயநிதி ஸ்டாலின் மிகவும் ஆபத்தானவர் என எதிரிகள் புலம்புகிறார்கள். ஆனால் தம்பி உதயநிதி தனது பொறுப்பை உணர்ந்து பவர்ஃபுல்லாக செயல்பட்டு வருகிறார். இன்னும் சொல்லப்போனால் அவர் இறங்கி அடிக்கிறார்.

சமீபத்தில் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா ‘பீகாரை முடித்துவிட்டோம்.. அடுத்து எங்கள் இலக்கு தமிழ்நாடு’ என்று சொல்லி இருக்கிறார்.

எழுதி வைத்துக் கொள்ளுங்கள் நீங்கள் எத்தனை பேரை கூட்டி வந்தாலும் நீங்கள் நினைப்பது தமிழ்நாட்டில் நடக்காது.. ஏனெனில் இது தமிழ்நாடு.. அன்போடு வந்தால் அரவணைப்போம்.. ஆணவத்தோடு வந்தால் அடிபணிய மாட்டோம்.. எதிர்த்து நிற்போம்’ என்று பேசியிருக்கிறார் முதல்வர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்