சினிமா

டிசம்பர் 19ல் ‘அவதார் – ஃபயர் அண்ட் ஆஷ்’ ரிலீஸ் : திரையரங்கு ஊழியர்களுக்கு ஜேம்ஸ் கேமரூன் கோரிக்கை!

இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன், தனது பிரம்மாண்டமான புதிய திரைப்படம் ‘அவதார் – ஃபயர் அண்ட் ஆஷ்’ வெளியீட்டிற்கு முன்னதாக, திரையரங்கு புரொஜெக்டர் ஆபரேட்டர்களுக்கு சிறப்பு அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளார்.

கடந்த 2009 மற்றும் 2022 இல் வெளியான அவதார் படங்களின் தொடர்ச்சியான மூன்றாம் பாகம், இந்த ஆண்டு டிசம்பர் 19 அன்று பல மொழிகளில் திரைக்கு வரவுள்ளது.

கேமரூன் தனது அறிக்கையில், “அவதார் ஃபயர் அண்ட் ஆஷ் திரைப்படத்தை வெளியிடும் திரையரங்குகளில், ஒலியின் ஃபேடர் அளவை 7.0 ஆக கண்டிப்பாக வைக்க வேண்டும். அப்போதுதான் இப்படத்தின் முழுமையான ஒலி அனுபவம் ரசிகர்களுக்கு கிடைக்கும். நான் தனிப்பட்ட முறையில் மிக்ஸிங் பணிகளில் கவனம் செலுத்தியுள்ளதால், இந்த அளவைவிட குறைவாக வைக்க வேண்டாம்” என்று வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் ஒற்றை திரையரங்குகளில் இந்த அளவு ஒலியை வைக்க வாய்ப்புள்ளது என்றும், மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் ஒலி சத்தம் அதிகமாக இருக்கும் என்பதால் அங்கு சாத்தியம் குறைவு என்றும் கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றன.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்