நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளியான புகழ்பெற்ற திரைப்படமான ‘நாட்டாமை’யில் ஆசிரியை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை ராணி. ‘ஜெமினி’ படத்தில் இடம்பெற்ற “ஓ போடு” பாடல் மூலமும் இவர் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றவர்.
தற்போது, நடிகை ராணி மகள் தர்ணிகா, தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். மறைந்த நடிகர் விஜயகாந்தின் மகன் ஷண்முக பாண்டியன் கதாநாயகனாக நடிக்கும் ‘கொம்புவீசி’ படத்தின் மூலம் இவர் அறிமுகமாகிறார்.
இயக்குநர் பொன்ராம் இயக்கியுள்ள இப்படத்தில், நடிகர் சரத்குமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நகைச்சுவை கலந்த கேங்ஸ்டர் கதையாக உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இப்படம் வரும் டிசம்பர் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதன் மூலம் நாட்டாமை ஆசிரியை கதாபாத்திர நடிகையின் மகள் திரையுலகில் காலடி எடுத்து வைத்துள்ளார்.

