உலகம்

இந்தியாவின் தேடப்படும் குற்றவாளி விஜய் மல்லையாவின் பிறந்த நாள் விழா.. லலித் மோடி பங்கேற்பு

இந்தியாவால் தேடப்படும் தொழிலதிபர்களான லலித் மோடி மற்றும் விஜய் மல்லையா இருவரும் லண்டனில் சந்தித்து கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் விவாதத்தை கிளப்பியுள்ளன.

விஜய் மல்லையாவின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு, ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி லண்டனில் உள்ள தனது சொகுசு இல்லத்தில் ஒரு பிரம்மாண்டமான வரவேற்பு விருந்தை அளித்துள்ளார்.

இந்த விழாவில் பயோகான் நிறுவனர் கிரண் மஜும்தார்-ஷா, ஹாலிவுட் நடிகர் இட்ரிஸ் எல்பா உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். “கிங் ஆஃப் குட் டைம்ஸ்” என்ற வாசகத்துடன் கூடிய சிறப்பு அழைப்பிதழ் மூலம் இந்த விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நிதி மோசடி புகார்கள் தொடர்பாக இந்திய சட்ட அமைப்புகளால் தேடப்பட்டு வரும் இவ்விருவரும், லண்டனில் எவ்வித கவலையுமின்றி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவது சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.

ஏற்கனவே லலித் மோடியின் பிறந்தநாள் விழாவில் மல்லையா கலந்து கொண்ட நிலையில், தற்போது மீண்டும் இவர்கள் இணைந்து கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம்

அமெரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதி டிக் செனி மறைவு

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் டிக் செனி.(84) இவர் அமெரிக்காவின் 46வது துணை ஜனாதிபதி ஆவார். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இவர் 2001 முதல் 2009-ம்
உலகம்

செய்யாத குற்றத்திற்காக 43 ஆண்டுகள் சிறையில் இருந்த இந்திய வம்சாவளி நபரின் நாடுகடத்தல் நிறுத்திவைப்பு

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 64 வயதான சுப்பிரமணியம் வேதம், தனது நண்பரைக் கொலை செய்ததாக குற்றம்சட்டப்பட்ட வழக்கில் 1980 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்றார். எந்த