கனடா

StatsCan நிறுவனத்தில் 32,000 பேருக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு!

கனடாவில் StatsCan நிறுவனத்தில் 32,000 பேருக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு!

கனடாவின் தேசிய புள்ளிவிபரவியல் திணைக்களமான ‘ஸ்டாடிஸ்டிக்ஸ் கனடா’ எதிர்வரும் 2026ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்குத் தயாராகும் வகையில் நாடு முழுவதும் சுமார் 32,000 பேரை வேலைக்கு அமர்த்தவுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த மாபெரும் ஆட்சேர்ப்பின் கீழ், கணக்கெடுப்பாளர்கள் மற்றும் குழுத் தலைவர்கள் ஆகிய பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

கணக்கெடுப்பாளர்கள் பகுதி நேர அடிப்படையில் பணிபுரிவார்கள். இவர்களின் பிரதான பணி மாலை நேரங்களிலும் வார இறுதி நாட்களிலும் காணப்படும். இவர்களுக்கு ஒரு மணித்தியாலத்திற்கு $25.87 சம்பளமாக வழங்கப்படும். அத்துடன், பயண தூரம் மற்றும் வாகன நிறுத்துமிடம் போன்றவற்றுக்கான செலவுகளும் வழங்கப்படும்.

குழுத் தலைவர்கள் பதவிக்கு முழு நேர அடிப்படையில் ஆட்கள் தேவைப்படுகின்றனர். இவர்கள் ஒரு குழுவை வழிநடத்தி, மேற்பார்வை செய்யும் பொறுப்பைக் கொண்டிருப்பார்கள். இவர்களுக்கு ஒரு மணித்தியாலத்திற்கு $31.23 சம்பளம் வழங்கப்படும். கனடாவின் சில வடக்கு மற்றும் தொலைதூர சமூகங்களில் இந்த சம்பள விகிதங்கள் இன்னும் அதிகமாகும்.

இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்க, நீங்கள் கனடிய பிரஜையாகவோ, நிரந்தர வதிவாளராகவோ அல்லது செல்லுபடியாகும் வேலை அனுமதியைக் கொண்டவராகவோ இருக்க வேண்டும். அத்துடன், 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், கனடாவில் வசிப்பவராகவும் இருத்தல் அவசியம். நாடு முழுவதுமான ஆட்சேர்ப்பு ஜனவரி 6ஆம் திகதி ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

கனடா

சுவீடன் மன்னர் கனடா விஜயம்

சுவீடன் மன்னர் கார்ல் XVI கஸ்டாஃப் மற்றும் மகாராணி சில்வியா நவம்பர் 18ஆம் திகதி கனடாவுக்கு விஜயம் செய்யஉ ள்ளனர். கனடா ஆளுநர் நாயகம் மேரி சைமன்
கனடா

கனடாவில் ஹாலோவின் இனிப்பு பையில் தங்க மோதிரம்

கனடாவின் வின்னிபிக் பகுதியில் ஹாலோவின் இனிப்பு பண்டங்கள் காணப்பட்ட பையொன்றில் தங்க மோதிரம் ஒன்று, பெண்ணுருவருக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. தனது மகளின் ஹாலோவின் இனிப்பு பண்ட பொதியில் இவ்வாறு