ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் டாம் குரூஸ், சுமார் 13 ஆண்டுகளுக்கு பிறகு ஆக்ஷன் காட்சிகள் இல்லாத ஒரு முழுநீள நடிப்பு சார்ந்த திரைப்படத்தில் நடிக்கிறார்.
‘தி ரெவனென்ட்’ படத்திற்காக ஆஸ்கர் வென்ற புகழ்பெற்ற இயக்குநர் அலெக்சாந்த்ரோ கோன்ஸாலே இனாரிட்டு இயக்கும் இந்தப் படத்திற்கு ‘டிக்கர்’ என பெயரிடப்பட்டுள்ளது.
சமீபத்தில் கௌரவ ஆஸ்கர் விருது பெற்ற டாம் குரூஸுக்கு, அவரது நடிப்பு திறமைக்காக போட்டி பிரிவில் ஆஸ்கர் விருதை பெற்றுத் தரும் நோக்கில் இப்படம் உருவாகிறது.
‘மிஷன் இம்பாசிபிள்’ போன்ற படங்களில் ஆபத்தான சாகசங்களை செய்து வரும் டாம் குரூஸ், நீண்ட இடைவேளைக்கு பிறகு உணர்ச்சிகரமான திரைக்கதையை தேர்ந்தெடுத்துள்ளது அவரது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
வார்னர் பிரதர்ஸ் தயாரிக்கும் இப்படம் 2026-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இது அலெக்சாந்த்ரோ கோன்ஸாலே இனாரிட்டு பல ஆண்டுகளுக்கு பிறகு இயக்கும் நேரடி ஆங்கிலப் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

