இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் நடிக்கும் ‘அரசன்’ திரைப்படத்தில், ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ புகழ் நடிகை யோகலட்சுமி இணைந்துள்ளார்.
வடசென்னை பின்னணியிலான ஒரு புதிய கதைகளத்தில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த டிசம்பர் 9-ஆம் தேதி மதுரையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இப்படத்தில் இணைந்த நிலையில், தற்போது யோகலட்சுமியும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
‘ஹார்ட் பீட்’ தொடர் மூலம் கவனத்தை ஈர்த்த இவருக்கு, வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு திருப்புமுனை கதாபாத்திரம் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. நீண்ட எதிர்பார்ப்புக்குப் பிறகு சிம்பு – வெற்றிமாறன் கூட்டணி இணைந்துள்ளதால், ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு பெரும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

