ஒவ்வொரு வருட இறுதியிலும் சினிமாக்களின் போக்கு எப்படி இருந்தது? எந்தெந்த நடிகர்கள் ஆதிக்கம் செலுத்தினார்கள்? எந்த படங்கள் மொக்கை வாங்கியது? எந்தெந்த படங்கள் ஹிட் அடித்தது? அந்த வருடத்தில் எந்தெந்த படங்கள் பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்தது என்பதை பற்றி ஒரு பெரிய கருத்துக்கணிப்பே நடக்கும். அப்படி இந்த வருடம் எந்தெந்த படங்களுக்கு அதிக எதிர்பார்ப்புகள் இருந்தன. அதில் எந்த படங்கள் மக்களை நல்ல முறையில் சென்றடைந்தது? எந்தெந்த படங்களுக்கு வரவேற்பு குறைவாக இருந்தது என்பதை பற்றிதான் இந்த செய்தியில் நாம் பார்க்க இருக்கிறோம்.
2025 ஆம் ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமாக இருந்தது விடாமுயற்சி. மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் திரிஷா நடிப்பில் வெளியான இந்த படத்தின் மீது பெரிய அளவில் எதிர்பார்ப்புகள் இருந்தன. ஏனெனில் படம் ஆரம்பித்ததில் இருந்து பல பிரச்சனைகளோடு தான் ஆரம்பித்தது. இதுவரை இல்லாத அஜித்தை இந்த படத்தில் நாம் பார்த்தோம். அது அஜித் ரசிகர்களுக்கே திருப்தியாக இல்லை. விமர்சன ரீதியாக அந்த படம் பெரிய அளவு மக்களை திருப்தி படுத்தவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
அடுத்ததாக இந்தியன் 2 திரைப்படம். பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தின் மீதும் மக்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அந்த அளவு பிரம்மாண்டமாக இந்த படத்தை உருவாக்கினார்கள். பெரிய பெரிய நடிகர்கள், பெரிய கூட்டணி ஆனால் யாருமே எதிர்பார்க்காத ஒரு தோல்வியை இந்த படம் சந்தித்தது. அடுத்து இந்தியன் 3 படத்தை எடுக்கும் முயற்சியிலும் இருக்கிறார்கள். ஆனால் அது நடக்குமா நடக்காதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
அடுத்ததாக கங்குவா திரைப்படத்தின் தோல்விக்கு பிறகு அனைவரும் எதிர்பார்த்த திரைப்படம் ரெட்ரோ. கார்த்திக் சுப்பராஜுடன் முதன்முதலாக சூர்யா இணையும் திரைப்படம் என்பதால் ஒரு ஆக்சன் திரைப்படமாக இருக்கும் என்று அனைவருமே இந்த படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்புடன் இருந்தனர். ஆனால் சூர்யாவுக்கு இந்தப் படமும் கை கொடுக்கவில்லை. விமர்சன ரீதியாக படம் கலையான விமர்சனத்தையே பெற்றது.
அடுத்ததாக தக் லைஃப் திரைப்படம். இதுவும் கமல் நடிப்பில் பெரிய அளவு எதிர்பார்ப்பை உண்டாக்கிய திரைப்படம். அது மட்டுமல்ல சிம்பு இந்த படத்தில் இணைந்திருக்கிறார் என்றதும் இந்த படத்திற்கு பெரிய அளவில் ஹைப் அதிகரித்தது. ஆனால் படம் வெளியான பிறகு இது என்ன கதை என்று மக்கள் தலையில் அடித்துக் கொண்டதுதான் மிச்சம். ஆனால் சிம்புவின் நடிப்பு இந்த படத்தில் அற்புதமாக இருந்தது.
அடுத்ததாக கூலி திரைப்படம். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான இந்த படம் வசூலில் சாதனை படைத்தது. எப்போதும் போல விமர்சன ரீதியாக கலவையான விமர்சனத்தை பெற்றது. தமிழ் சினிமாவிற்கு வசூலை வாரி இறைத்த படம் என்றால் அது கூலி திரைப்படம். இந்த வரிசையில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் பெரிய அளவில் வெற்றியை பெற்று கொடுத்தது. அஜித் ரசிகர்களுக்காக எடுக்கப்பட்ட படம் போல இது அமைந்ததனால் எல்லா ரசிகர்களும் கொண்டாடும் படமாகவும் இது மாறியது.
அதை போல் ஜனநாயகன், இந்தியன் 3, ஜெயிலர் 2, பராசக்தி போன்ற திரைப்படங்களுக்கும் பெரிய அளவு எதிர்பார்ப்பு இப்போதிலிருந்து ஆரம்பித்து விட்டது. ஜனநாயகன் திரைப்படத்தை பொருத்தவரைக்கும் ஜனவரி ஒன்பதாம் தேதி ரிலீஸ் ஆகின்றது. பராசக்தி திரைப்படம் ஜனவரி 10ஆம் தேதி ரிலீஸ் ஆகின்றது. அதைப்போல ஜெயிலர் 2 திரைப்படம் ஆகஸ்ட் 12ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

