புனே மாநகராட்சி தேர்தலுக்கு இன்னும் மூன்று வாரங்களே உள்ள நிலையில், வாக்காளர்களை கவர வேட்பாளர்கள் அள்ளிவீசும் இலவசங்கள் அதிரவைக்கின்றன.
புனேவின் ஒவ்வொரு வார்டிலும் வேட்பாளர்கள் தங்கள் பணபலத்தை காட்டி வாக்காளர்களை வளைத்து போட்டு வருகின்றனர். இதோ சில அதிரடி உதாரணங்கள்:
சொந்த நிலம் பரிசு: லோகான்-தனோரி வார்டில் ஒரு வேட்பாளர், ‘அதிர்ஷ்டக் குலுக்கல்’ மூலம் 11 வாக்காளர்களுக்கு தலா 1,100 சதுர அடி நிலம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். இதற்கான ‘பதிவு’ பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன.
தாய்லாந்து சுற்றுலா: விமன் நகர் வார்டில் ஒரு வேட்பாளர், வெற்றி பெற்றால் வாக்காளர் தம்பதிகளுக்கு 5 நாட்கள் தாய்லாந்து சொகுசு சுற்றுலா அழைத்து செல்லப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார்.
பெண்களுக்கு சிறப்புப் பரிசுகள்: இல்லத்தரசிகளை கவர தூய தங்கம் மற்றும் வெள்ளி வேலைப்பாடுகள் கொண்ட ஆயிரக்கணக்கான பைதானி பட்டு புடவைகள், தையல் இயந்திரங்கள் மற்றும் சைக்கிள்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
விளையாட்டு ஆர்வலர்களுக்கு கிரிக்கெட் லீக் போட்டிகள் நடத்தப்பட்டு, ஒரு லட்சம் ரூபாய் வரை ரொக்க பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது தவிர எஸ்.யு.வி கார்கள், இருசக்கர வாகனங்கள் மற்றும் தங்க நகைகளும் குலுக்கல் முறையில் வழங்கப்படுகின்றன.

