உலகம்

ஜிமெயில் முகவரியை இனி மாற்றி கொள்ளலாம்.. கூகுள் தரும் புதிய வசதி..!

பல ஆண்டுகளாக ஜிமெயில் பயனர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்த ஒரு முக்கிய வசதியை வழங்க கூகுள் நிறுவனம் தயாராகி வருகிறது. இதுவரை ஜிமெயில் முகவரியை ஒருமுறை உருவாக்கிவிட்டால், அதில் எந்த மாற்றமும் செய்ய முடியாது என்ற நிலையே இருந்தது. ஆனால், இனி பயனர்கள் தங்களின் மின்னஞ்சல் முகவரியில் திருத்தம் அல்லது முழுமையான மாற்றம் செய்யும் புதிய வசதியை கூகுள் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.

கூகுள் சப்போர்ட் பக்கத்தில் இதற்கான புதிய ஆப்சன் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய வசதியின் மூலம், ஒருவர் தனது பழைய ஜிமெயில் ஐடியை மாற்றினாலும், பழைய முகவரிக்கு வரும் மின்னஞ்சல்கள் தானாகவே புதிய இன்பாக்ஸிற்கு வந்து சேரும் வகையில் தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் பழைய தரவுகள் அல்லது முக்கியமான இமெயில்கள் எதையும் இழக்க வேண்டியதில்லை.

இருப்பினும், இந்த வசதிக்கு சில கட்டுப்பாடுகள் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. உதாரணமாக, ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒருமுறை மட்டுமே முகவரியை மாற்ற முடியும் என்ற நிபந்தனை விதிக்கப்படலாம்.

முதற்கட்டமாக சோதனை முயற்சியாக அறிமுகப்படுத்தப்பட்டு, அதன் பின்னரே உலகெங்கும் உள்ள பயனர்களுக்கு இந்த வசதி கிடைக்கும். தங்களின் பழைய இமெயில் முகவரிகளை மாற்ற துடிக்கும் பயனர்களுக்கு இது ஒரு மிகப்பெரிய செய்தியாகும்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம்

அமெரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதி டிக் செனி மறைவு

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் டிக் செனி.(84) இவர் அமெரிக்காவின் 46வது துணை ஜனாதிபதி ஆவார். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இவர் 2001 முதல் 2009-ம்
உலகம்

செய்யாத குற்றத்திற்காக 43 ஆண்டுகள் சிறையில் இருந்த இந்திய வம்சாவளி நபரின் நாடுகடத்தல் நிறுத்திவைப்பு

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 64 வயதான சுப்பிரமணியம் வேதம், தனது நண்பரைக் கொலை செய்ததாக குற்றம்சட்டப்பட்ட வழக்கில் 1980 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்றார். எந்த