கனடா

நகர மத்தியில் அமைந்துள்ள முகாமில் தீ விபத்து

ரொரன்ரோ நகர மத்தியில் அமைந்துள்ள முகாமில் தீ விபத்து.

ரொரன்ரோ நகர மத்தியில் தேவாலயம் ஒன்றிற்கு வெளியே அமைந்திருந்த முகாம் ஒன்றில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Yonge மற்றும் Charles வீதிகள் சந்திப்பிற்கு அருகிலுள்ள தேவாலயத்திற்கு வெளியே இந்தத் தீ விபத்து இன்று காலை 6 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக அவசர சேவைகள் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த ரொரன்ரோ அவசர மருத்துவ சேவைக் குழுவினர், படுகாயமடைந்த ஒருவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவரது காயங்கள் உயிருக்கு ஆபத்தானவை அல்ல எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீயணைப்புப் படையினர் தீயை அணைத்த பின்னர், தேவாலயத்திற்கு வெளியே இருந்த பல பொருட்கள் சேதமடைந்திருந்தமை அவதானிக்கப்பட்டது. தீ விபத்துக்கான சரியான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இது தொடர்பான விசாரணைகள் தொடர்கின்றன.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

கனடா

சுவீடன் மன்னர் கனடா விஜயம்

சுவீடன் மன்னர் கார்ல் XVI கஸ்டாஃப் மற்றும் மகாராணி சில்வியா நவம்பர் 18ஆம் திகதி கனடாவுக்கு விஜயம் செய்யஉ ள்ளனர். கனடா ஆளுநர் நாயகம் மேரி சைமன்
கனடா

கனடாவில் ஹாலோவின் இனிப்பு பையில் தங்க மோதிரம்

கனடாவின் வின்னிபிக் பகுதியில் ஹாலோவின் இனிப்பு பண்டங்கள் காணப்பட்ட பையொன்றில் தங்க மோதிரம் ஒன்று, பெண்ணுருவருக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. தனது மகளின் ஹாலோவின் இனிப்பு பண்ட பொதியில் இவ்வாறு