சினிமா

இன்னைக்கு ஷோ முடிஞ்சிடுச்சு! மூட்டைய கட்டிய ‘பராசக்தி’ படக்குழு

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வர காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் பராசக்தி. இந்தப் படத்தில் ரவி மோகன் வில்லனாக நடித்திருக்கிறார். அதர்வா ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடித்துள்ளார். படத்திற்கு ஜிவி இசை. ஆகாஷ்பாஸ்கரன் படத்தை தயாரித்துள்ளார்.

படம் பொங்கல் ரிலீஸாக ஜனவரி 10 ஆம் தேதியை லாக் செய்தனர். ஆனால் தணிக்கை குழு பிரச்சினையால் கொஞ்சம் தாமதாகிக் கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் பராசக்தி படத்தின் கதை என்னுடையது என உதவி இயக்குனர் ராஜேந்திரன் என்பவரும் வழக்கு பதிவு செய்துள்ளார். அது சம்பந்தமான வழக்கும் இப்போது நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

ஹிந்தி திணிப்பை எதிர்த்து நடந்த மொழிப்போரை மையப்படுத்தி செம்மொழி என்ற பெயரில் தான் ஒரு கதை எழுதியதாகவும் அதை திருடிதான் பராசக்தி படத்தை எடுத்திருக்கிறார்கள் என்றும் ராஜேந்திரன் வழக்கு பதிவு செய்துள்ளார்,

இன்னொரு பக்கம் பராசக்தி படத்தை எல்லா ரசிகர்களுக்கும் கொண்டு போய் சேர்க்க படக்குழு தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. அதற்கு முதற்படியாக வள்ளுவர் கோட்டத்தில் ஒரு கண்காட்சியை ஏற்பாடு செய்தார்கள். அதில் பராசக்தி படத்தை பற்றியும் அந்தப் படத்தில் பயன்படுத்தப்பட்ட பொருள்களையும் கண்காட்சிக்காக வைத்திருந்தார்கள்.

அதை பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து சென்றனர். இப்போது அதை முடித்துக் கொண்டு மதுரை மற்றும் கோவையில் கண்காட்சியை வைக்க இருக்கிறார்கள். பராசக்தி படக்குழுவின் முக்கிய நோக்கம் எப்படியாவது இந்தப் படத்தை பெரியளவில் மக்களிடத்தில் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்பதுதான். அதற்கான முயற்சியில்தான் இப்போது இறங்கியிருக்கிறார்கள்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்