சினிமா

தன்னடக்கத்துடன் இருங்கள்; காடு உங்களுக்கான சரியான இடத்தை காட்டும்.. ரிமா கல்லிங்கள் புத்தாண்டு தத்துவம்..!

மலையாள திரையுலகின் முன்னணி நடிகையான ரிமா கல்லிங்கள், 2026 புத்தாண்டை முன்னிட்டு ஒரு ஆழமான வாழ்க்கை தத்துவத்தை தனது ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.

உலகம் முழுவதும் புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், திரையுலகினர் பலரும் வாழ்த்துகளை தெரிவித்தனர். அந்த வகையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட ரிமா கல்லிங்கள், “தன்னடக்கத்துடன் இருங்கள்; காடு உங்களுக்கான சரியான இடத்தை காட்டும்” என்று குறிப்பிட்டு, இயற்கையுடன் இணைந்த ஒரு அமைதியான தத்துவத்தை முன்வைத்துள்ளார்.

இந்த ஆண்டை தனது கனவுத் திட்டத்துடன் தொடங்குவது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ள அவர், கேரளாவின் காட்டுப்பகுதியில் அமைந்துள்ள சிமினி அணையின் மையப்பகுதியில் இருந்து தனது புத்தாண்டு பயணத்தை தொடங்கியுள்ளார்.

“அழகான மற்றும் அமைதியான இந்த இடம் உங்களுக்கு புதிய உத்வேகத்தை ஊட்டும்” என்று பதிவிட்டுள்ள அவர், அங்கிருந்து எடுக்கப்பட்ட கூடுதல் புகைப்படங்களை விரைவில் வெளியிடுவதாகவும் உறுதியளித்துள்ளார். அவரது இந்த வித்தியாசமான புத்தாண்டு பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிப்பில் மட்டுமல்லாமல் சமூக அக்கறை கொண்ட கருத்துகளையும் துணிச்சலாகப் பகிரும் ரிமா கல்லிங்களின் ‘தியேட்டர்’ என்ற திரைப்படம் விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்