சினிமா

சிபி சக்கரவர்த்திக்கு அடித்தது ஜாக்பாட்.. ரஜினி, கமல் படத்தை இயக்குவதாக அறிவிப்பு..!

தமிழ் திரையுலகின் இருபெரும் துருவங்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் ஆகிய இருவரும் நீண்ட இடைவேளைக்கு பிறகு ஒரே படத்தில் இணையவுள்ளனர். இந்தப் பிரம்மாண்டமான திரைப்படத்தை கமல்ஹாசனின் ‘ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்’ நிறுவனம் தயாரிக்கிறது.

முன்னதாக இந்த படத்தை சுந்தர் சி இயக்குவார் என்று பேசப்பட்ட நிலையில், தற்போது அதிகாரப்பூர்வமாக இளம் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இந்த படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

சிவகார்த்திகேயன் நடித்த ‘டான்’ திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்த சிபி சக்கரவர்த்திக்கு, இது ஒரு ஜாக்பாட் வாய்ப்பாக கருதப்படுகிறது. ரஜினி மற்றும் கமல் ஆகிய இரு ஆளுமைகளையும் ஒரே திரையில் கையாள்வது ஒரு சவாலான பணி என்றாலும், சிபியின் திரைக்கதை மற்றும் இயக்கம் மீது படக்குழு மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளது. இது குறித்த முறையான அறிவிப்பு ராஜ்கமல் நிறுவனத்தின் சமூக வலைதளப் பக்கத்தில் இன்று வெளியிடப்பட்டு வைரலாகி வருகிறது.

சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியும் கமலும் இணைந்து நடிக்கும் இந்த படத்தை காண ஒட்டுமொத்தத் திரை உலகமும் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்