சினிமா

முதல்வர் ஸ்டாலினுக்கு நூறு ஓட்டு கூட கிடைக்காது.. ஏவிஎம் நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த்..!

சென்னையில் நடைபெற்ற மறைந்த புகழ்பெற்ற தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி, திரையுலக மற்றும் அரசியல் பிரமுகர்களின் சங்கமமாக அமைந்தது. இவ்விழாவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன் உள்ளிட்ட பல முக்கியப் பிரபலங்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த், தற்போதைய தேர்தல் சூழலை குறிப்பிட்டு நெகிழ்ச்சியான கருத்துகளை பகிர்ந்து கொண்டார். “தேர்தல் நேரத்தில் ஒவ்வொரு மணி நேரமும் மிக முக்கியமானது. முதல்வர் இங்கு வருவதால் அவருக்கு புதிதாக நூறு ஓட்டுகள் கூட கிடைக்கப் போவதில்லை. இருப்பினும், தனது நெருக்கடியான நேரத்திலும் இந்த நிகழ்வில் அவர் கலந்து கொண்டது அவரது உயரிய பண்பையும், ஏவிஎம் குடும்பத்தின் மீதான மதிப்பையும் காட்டுகிறது” என்று பாராட்டினார். மேலும், ஏவிஎம் சரவணன் அவர்கள் எப்படிப்பட்ட கண்ணியமான வாழ்க்கையை வாழ்ந்தார் என்பதற்கு இந்த அரங்கம் நிறைந்த கூட்டமே சாட்சி என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஏவிஎம் நிறுவனத்துடன் தனக்கிருந்த நினைவுகளை பகிர்ந்த ரஜினிகாந்த், “ஏவிஎம் தயாரிப்பில் நான் நடித்த சிவாஜி திரைப்படம் அரசுக்கு எதிரான கருத்துகளை கொண்டிருந்த போதிலும், அன்றைய முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி அவர்கள் அந்த படத்தை மனதாரப் பாராட்டினார்” என்று ஒரு சுவாரசியமான தகவலையும் நினைவு கூர்ந்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்