கனடா

2026இல் கனடாவில் அதிகம் தேவைப்படும் வேலைகள் சில

நீங்கள் புதிதாக வேலை தேடுபவராக இருந்தாலும் சரி அல்லது தொழில் மாற்றத்தை எதிர்பார்த்து இருந்தாலும் சரி, கனடாவில் எந்தெந்த வேலைகளுக்கு அதிக கேள்வி உள்ளது என்பதை அறிவது பயனுள்ளதாக இருக்கும்.

உலகின் மிகப்பெரிய ஆட்சேர்ப்பு நிறுவனங்களில் ஒன்றான ரான்ட்ஸ்டாட் கனடா, 2026ஆம் ஆண்டுக்கான அதிக தேவையுள்ள முதல் 15 வேலைகளின் வருடாந்த தரவரிசையை வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கை, சந்தைப் போக்குகளைப் புரிந்துகொள்ளவும், நிறுவனங்கள் தமது தொழிலாளர் தேவைகளைத் திட்டமிடவும் உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு உங்கள் வேலையைப் பறித்துவிடுமோ என்ற கவலை இருந்தால், இந்த அறிக்கை சில உறுதியான செய்திகளைக் கொண்டுள்ளது. “தொழில்நுட்பம் மனிதர்களை மாற்றுவதில்லை, அது உறவுமுறை மற்றும் மூலோபாயப் பாத்திரங்களை மேம்படுத்துகிறது” என ரான்ட்ஸ்டாட் கனடாவின் தலைவர் பற்றிக் பூலின் வலியுறுத்தியுள்ளார்.

இந்த ஆண்டு கனடாவில் அதிக தேவையுள்ள முதல் 15 வேலைகளாக விற்பனை உதவியாளர், நிர்வாக உதவியாளர், வாடிக்கையாளர் சேவைப் பிரதிநிதி, வரவேற்பாளர், கணக்குப்பதிவாளர் போன்றவை காணப்படுகின்றன.

இந்த வேலைகளுக்கான தேவைக்கான காரணங்ககளாக வயதான சனத்தொகை மற்றும் தொற்றுநோய்க்குப் பிந்தைய காலத்தின் விளைவுகள் உட்பட சுகாதாரத் துறை ஒரு முக்கிய வேலைவாய்ப்பு இயந்திரமாக உருவெடுத்துள்ளது.

பதிவுசெய்யப்பட்ட தாதியர்கள், உரிமம் பெற்ற/பதிவுசெய்யப்பட்ட நடைமுறைத் தாதியர்கள், பல் மருத்துவ உதவியாளர்கள் மற்றும் மருந்தக உதவியாளர்களுக்கான தேவை வலுவாக உள்ளது. இப்பட்டியலில், பதிவுசெய்யப்பட்ட தாதியர்கள் ஆண்டுக்கு சராசரியாக $92,566 சம்பளத்துடன் அதிக வருமானம் பெறுகின்றனர்.

சில்லறை விற்பனை மற்றும் வர்த்தகத் துறைகளில், கடை முகாமையாளர்கள் மற்றும் விற்பனை உதவியாளர்கள் வெறும் பரிவர்த்தனைகளுக்குப் பதிலாக, வாடிக்கையாளர் ஈடுபாடு மற்றும் நீண்டகால உறவுகளைக் கட்டியெழுப்புவதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

செயற்கை நுண்ணறிவு சில பணிகளை தானியக்கமாக்கினாலும், நிர்வாக உதவியாளர்கள் மற்றும் வரவேற்பாளர்களின் மதிப்பு, சிக்கல்களைத் தீர்ப்பதிலும், டிஜிட்டல் அறிவிலும் தங்கியுள்ளது.

நிதி மேற்பார்வை மற்றும் ஒழுங்குமுறை இணக்கப்பாட்டிற்காக கணக்குப்பதிவாளர்கள் மற்றும் கணக்கீட்டு எழுத்தர்களுக்கான தேவையும் அதிகமாக உள்ளது. இறுதியாக, விநியோகச் சங்கிலிகள் திறமையாக இயங்குவதற்கு ஃபோர்க்லிஃப்ட் இயக்குபவர்களின் பங்கு முக்கியமானது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

கனடா

சுவீடன் மன்னர் கனடா விஜயம்

சுவீடன் மன்னர் கார்ல் XVI கஸ்டாஃப் மற்றும் மகாராணி சில்வியா நவம்பர் 18ஆம் திகதி கனடாவுக்கு விஜயம் செய்யஉ ள்ளனர். கனடா ஆளுநர் நாயகம் மேரி சைமன்
கனடா

கனடாவில் ஹாலோவின் இனிப்பு பையில் தங்க மோதிரம்

கனடாவின் வின்னிபிக் பகுதியில் ஹாலோவின் இனிப்பு பண்டங்கள் காணப்பட்ட பையொன்றில் தங்க மோதிரம் ஒன்று, பெண்ணுருவருக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. தனது மகளின் ஹாலோவின் இனிப்பு பண்ட பொதியில் இவ்வாறு