பொதுவாகவே நிறைய விளம்பர நிறுவனங்கள் சினிமா பிரபலங்களை வைத்து தங்களின் பொருட்களுக்கான விளம்பரங்களை எடுப்பார்கள். பல வருடங்களாகவே பல மொழிகளை சேர்ந்த சினிமா பிரபலங்கள் விளம்பர படங்களில் நடித்திருக்கிறார்கள். அவர்களை வைத்து விளம்பர படங்களை எடுத்தால் அது மக்களிடையே சுலபமாக ரீச் ஆகும் என நினைக்கிறார்கள். இரண்டு மணி நேரம் நடித்துவிட்டு இரண்டு கோடி வாங்கிக் கொண்டு சென்று விடுவார்கள்.
அதுவும் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ஷாருக்கான் போன்ற நடிகர் என்றால் சில நூறு கோடிகள் கொடுப்பார்கள்.
ஒருபக்கம் சினிமா நடிகர்களின் புகைப்படங்களையும், வீடியோக்களையும் கூட சில விளம்பரங்களில் பயன்படுத்துவார்கள். பொதுவாக இதை யாரும் கண்டு கொள்வதில்லை. இந்நிலையில்தான், நடிகரும் நடிகர் கமல்ஹாசன் வணிகரீதியாக தனது பெயரை பயன்படுத்த கூடாது என எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.
தனது பெயர் புகைப்படங்களை அனுமதி இன்றி பயன்படுத்த தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகரும், எம்.பியுமான கமல்ஹாசன் வழக்கு தொடர்ந்து இருக்கிறார். நீயே விடை என்கிற நிறுவனம் அனுமதியின்றி தனது பெயர் மற்றும் புகைப்படங்களை டீசர்ட்டில் அச்சடித்து விற்பனை செய்ததை சுட்டிக்காட்டி உரிமையியல் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
ஏற்கனவே இசையமைப்பாளர் இளையராஜா தனது பெயரையும், பாடல்களையும் வணிகரீதியாக பயன்படுத்தக் கூடாது எனத் தொடர்ந்து வழக்கு தொடர்ந்து வரும் நிலையில் அந்த வரிசையில் நடிகர் கமல்ஹாசனும் இணைந்திருக்கிறார்.

