அமராவதி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் அஜித். அதன்பின் பல வருடங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். பல வருடங்களாகவே விஜய்க்கு சரி சமமான போட்டி நடிகராக வலம் வந்தார்.அமர்க்களம் படத்தில் நடித்த போது நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஒரு மகன், ஒரு மகள் என சந்தோஷமான திருமண வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.
திரைப்படங்களில் நடித்து வந்தாலும் அஜித்துக்கு பைக் மற்றும் கார் ரேஸ் ஆகியவற்றில் நீங்க கலந்து கொள்வது மிகவும் பிடிக்கும். பைக்கில் பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணிப்பது அவருக்கு பிடித்த ஒன்று. ஒருபக்கம், கடந்த சில கடந்த சில வருடங்களாக அஜித் தொடர்ந்து கார் ரேஸ்களில் கலந்து கொண்டு விளையாடி வருகிறார். துபாயில் நடந்த போட்டியில் அஜித்தின் டீம் 3வது பரிசையும் பெற்றது. இந்நிலையில்தான், அஜித் ஒரு விளம்பர படத்தில் நடித்திருக்கிறார்.
CAMPA என்கிற குளிர்பானத்தின் விளம்பரம் அது. இது தொடர்பான விளம்பர வீடியோவை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கியிருக்கிறார். தற்போது அதன் புகைப்படம் வெளியாகியிருக்கிறது. ஆனால் மக்களின் உடல்நலத்தை கெடுக்கும் ஒரு குளிர்பான விளம்பரத்தில் அஜித் எப்படி நடிக்கலாம் என சமூக ஆர்வலர்கள் பொங்கி வருகிறார்கள்.

