ஒரு படத்தின் தோல்வி வெற்றி என்பது அவரவர் அதிர்ஷ்டத்தை பொறுத்து அமைவது. எப்படியாவது படத்தை வெற்றியாக்க வேண்டும் என்று நினைத்துதான் படத்தை எடுக்கிறார்கள். ஆனால் அது ரசிகர்களிடம் என்னவாக போகிறது என்பதை பொறுத்தே அதன் வெற்றி உறுதிசெய்யப்படுகிறது. ஒரே ரசனையுள்ள ரசிகர்கள் இருக்க மாட்டார்கள். ஒவ்வொருவருக்கும் ரசனை என்பது மாறுபடும்.
அதற்கேற்பதான் படத்தின் வெற்றியும் மாறுபடுகிறது. அப்படி அஜித் நடித்த ஒரு படம் 200 நாள்களுக்கு மேல் ஓட வேண்டியது. ஆனால் 175 நாளில் ஓடி சாதனை படைத்தாலும் கிளைமாக்ஸை இப்படி மாற்றியிருக்கலாமா என்று இப்போதுவரை ஃபீல் பண்ண வைத்த படம். அதுதான் முகவரி திரைப்படம். துரை இயக்கத்தில் அஜித், ஜோதிகா நடிப்பில் வெளியான திரைப்படம்தான் முகவரி.
அந்தப் படத்தில் ரகுவரன் அஜித்துக்கு அண்ணனாக நடித்திருப்பார். அவருடைய கேரக்டர்தான் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. ஒரு அண்ணனாக அஜித்துக்கு ரகுவரன் சொல்லும் கதை. அறிவுரையை பார்க்கும் போது இப்படியொரு அண்ணன் நமக்கு இல்லையே என்றுதான் நினைக்க தோன்றும். படத்தில் எப்படியாவது ஒரு மியூசிக் டைரக்டராக வேண்டும் என்ற முயற்சியில் அஜித் இருப்பார்.
ஆனால் சூழ் நிலை அவரை வேறு ஒரு முடிவை எடுக்க வைக்கும். கடைசியில் கிளைமாக்ஸில் ஏதாவது ஒரு வேலையை தேடி போவோம் என தனியாக ரோட்டில் நடந்து போவது மாறி கதையை முடித்திருப்பார்கள். இதை பார்த்ததும் கே.எஸ். ரவிக்குமார் துரையிடம் ‘275 நாள்கள் ஓட வேண்டிய படத்தை 175 நாளாக குறைச்சிட்டீயே’ என்று சொல்லி வருத்தப்பட்டாராம்.
வேண்டுமென்றால் நான் நடிக்கிறேன். கிளைமாக்ஸ் மாற்று என்றும் ரவிக்குமார் சொல்லியிருக்கிறார். ஆனால் அஜித்தின் அண்ணனும் வேண்டாம் என சொல்லிவிட்டாராம். அஜித்தும் நோ சொல்லிவிட்டாராம். மேலும் அஜித் சொல்லும் போது நம்பர் நமக்கு முக்கியமில்லை. எந்தளவு ஒரு படம் பெரிய தாக்கத்தை உண்டாக்குகிறது என்பதுதான் முக்கியம் என்று சொன்னாராம் அஜித்.
இருந்தாலும் முகவரி படம் வெற்றிகரமாக ஓடி 100 நாள் விழாவையும் நடத்தியிருக்கிறார்கள். இந்தப் படம் முடிவடைவதற்கு முன்பே இயக்குனர் துரைக்கு கார் ஒன்றை பரிசாக அளித்தாராம் அஜித்.

