சினிமா

180 கோடி சம்பளம்!.. 90 கோடி அட்வான்ஸ்!.. கோலிவுட்டில் லக்கிமேன் தனுஷ்தான்!

கோலிவுட்டில் உள்ள இளம் நடிகர்களில் முக்கியமானவர் தனுஷ். கஸ்தூரி ராஜாவின் மகன், செல்வராகவனின் தம்பி என்கிற அடையாளத்தோடு சினிமாவில் அறிமுகமானார். துவக்கத்திலிருந்தே தான் ஒரு சிறந்த நடிகர் என நிரூபித்தார். ஒரு கட்டத்தில் ஹிந்தி மொழி படங்களிலும் நடிக்கத் தொடங்கினார். இப்போது தெலுங்கு மொழியிலும் நடித்து வருகிறார். இவரின் நடிப்பில் உருவான குபேரா தமிழ், தெலுங்கு இரண்டு மொழியிலும் வெளியானது. இந்த படம் தமிழை விட தெலுங்கில் நல்ல வசூலை பெற்றது.

அதன்பின் தனுஷ் இயக்கி நடித்த இட்லி கடை படம் வெளியானது. இந்த படம் சுமாரான வெற்றியை பெற்றது. தற்போது போர்த்தொழில் படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா இயக்கத்தில் கர என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார் தனுஷ். இந்த படத்தை ஐஸ்வரி கணேஷ் தயாரித்திருக்கிறார். இந்த படத்திற்கு அடுத்து அவரின் தயாரிப்பில் மேலும் இரண்டு படங்களில் தனுஷ் நடிக்கவுள்ளார். அதில் ஒரு படத்தை மாரி செல்வராஜின், இன்னொரு படத்தை வெற்றிமாறனும் இயக்கவிருக்கிறார்கள்.

ஐஸ்வரி கணேசன் தயாரிப்பில் மொத்தம் மூன்று படங்கள் எனப் பேசி ஒரு படத்திற்கு 60 கோடி. 3 படத்திற்கும் சேர்த்து 180 கோடி என தனுஷுக்கு சம்பளம் பேசப்பட்டிருக்கிறது. அதோடு தனுஷுக்கு 90 கோடி அட்வான்ஸையும் ஐசரி கணேஷ் கொடுத்து விட்டாராம்.

கோலிவுட்டில் இப்போதைய லக்கி மேன் தனுஷ்தான் என்று பேசி வருகிறார்கள்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்