சினிமா

பராசக்தி வசூலை வெளியிட்ட தயாரிப்பாளர்!

கடந்த பல வருடங்களாகவே விஜய் படத்தோடு வேறு நடிகரின் படம் போட்டியிட்டால் விஜய் ரசிகர்கள் அந்த படத்தை ட்ரோல் செய்வது தொடர்கதையாகி விட்டது. குறிப்பாக விஜயின் போட்டி நடிகர்களாக பார்க்கப்படும் அஜித், ரஜினி ஆகியோரின் படங்கள் வெளியானால் அந்த படங்களுக்கு எதிரான நெகட்டிவ் விமர்சனங்களை பரப்புவதை விஜய் ரசிகர்கள் வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். அஜித்தின் துணிவு, விடாமுயற்சி, குட் பேட் அக்லி, ரஜினியின் வேட்டையன் ஆகிய படங்கள் வந்தபோதும் இதைத்தான் செய்தார்கள்.

விஜயின் ஜனநாயகன் படத்தோடு பராசக்தி படம் வெளியாகிறது என செய்தி வந்ததும் அதை விஜய் ரசிகர்களை கோபப்படுத்தியது. இதற்கு சிவகார்த்திகேயன் என்னென்னவோ விளக்கமளித்தும் அவர்கள் கேட்கவில்லை. ஒருபக்கம் ஜனநாயகன் படமும் ஜனவரி 9ம் தேதி வெளியாகவில்லை என்பதால் விஜய் ரசிகர்களும் கோபம் அனைத்தும் பராசக்தி படம் மீது எதிரொலித்தது.

பராசக்தி படம் வெளியானவுடன் அப்படத்திற்கு எதிராக நெகட்டிவ் விமர்சனங்களை பரப்ப துவங்கினார்கள். ஒருபக்கம் பராசக்தி படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. சிலர் நெகட்டிவாகவும் விமர்சித்தார்கள். அதன் காரணமாக பராசக்தி படம் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை என சொல்லப்பட்டது.

இந்நிலையில்தான், பராசக்தி திரைப்படம் இதுவரை 100 கோடி வசூல் செய்துவிட்டதாக இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் தற்போது செய்தி வெளியிட்டிருக்கிறது.. ஆனால் ‘இது உண்மை இல்லை இது தவறான தகவல்.. சொந்த காசில் சூனியம் வைத்துக்கொள்கிறார்கள்’ என்று விஜய் ரசிகர்கள் இதை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்