இலங்கை

“நாடே ஒன்றிணைவோம்” தேசிய நடவடிக்கையின் முன்னேற்றம் குறித்து விசேட ஊடக சந்திப்பு

பாதுகாப்புத் தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் அதிகளவான போதைப்பொருள் தொகையை கைப்பற்ற முடிந்தது 2025 ஆம் ஆண்டிலேயே என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவி பொலிஸ் அத்தியட்சகருமான எப். யூ. வுட்லர் தெரிவித்துள்ளார்.

“நாடே ஒன்றிணைவோம்” தேசிய நடவடிக்கையின் முன்னேற்றம் குறித்து இன்று (22) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

2024 ஆம் ஆண்டில் ஹெரோயின், கஞ்சா, ஐஸ், ஹஷிஸ் மற்றும் கொக்கேய்ன் உள்ளிட்ட 10,871 கிலோகிராம் போதைப்பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டிருந்தன.

ஆனால், இந்த அளவு 2025 ஆம் ஆண்டில் 23,692 கிலோகிராம் 307 கிராமாக அதிகரித்துள்ளதாகவும், இது (2024 உடன் ஒப்பிடுகையில்) சுமார் மூன்று மடங்கு அதிகரிப்பு எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இலங்கை

விபுலானந்தர் பிறந்த மண்ணான காரைதீவு பிரதேசத்தின் கலாசார விழா -2025

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் பிறந்த மண்ணான கிழக்கு மாகாண, காரைதீவு பிரதேசத்தின் கலாசார விழா காரைதீவு பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் கே. சுதர்சனின் நெறிப்படுத்தலில்
இலங்கை

மீண்டும் வரலாற்றுச் சாதனை படைத்த கொழும்பு பங்குச்சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று (04.11.2025) வரலாற்றில் மீண்டும் உச்சத்தைப் பதிவு செய்துள்ளது. அதன்படி அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண்