சினிமா

பாக்ஸ் ஆபிஸ் கிங் அஜித்தான்!.. கில்லி ரீ-ரிலீஸ் வசூலை தாண்டிய மங்காத்தா!

சமீப காலமாக ரஜினி, விஜய், அஜித் போன்ற நடிகர்கள் 25 வருடங்களுக்கு முன்பு நடித்து வெளியான திரைப்படங்களை ரீ-ரிலீஸ் என்கிற பெயரில் மீண்டும் வெளியிட்டு வருகிறார்கள்.

முன்னணி நடிகர்களின் புதிய படங்களே பாக்ஸ் ஆபிஸில் தோல்வி அடைந்து வரும் நிலையில் இதுபோன்ற ரீ-ரிலீஸ் படங்கள் தியேட்டர் அதிபர்களுக்கும், வினியோகஸ்தர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் நல்ல லாபத்தை கொடுத்து வருகிறது.

விஜயின் கில்லி திரைப்படம் ஏற்கனவே வெளியாகி 20 கோடி வரை வசூல் செய்தது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித்குமார், திரிஷா உள்ளிட்ட பலரும் நடித்து 2011ம் வருடம் வெளியான மங்காத்தா திரைப்படம் நேற்று ரி-ரிலீஸ் செய்யப்பட்டது.இந்த திரைப்படம் வெளியான முதல் நாளில் தமிழகத்தில் 5 கோடி வரை வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.

தரணி இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான கில்லி திரைப்படம் தமிழகத்தில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு முதல் நாளில் 3.5 கோடி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து அஜித் ரசிகர்கள் மங்காத்தா ரீ-ரிலீஸ் வசூலை கில்லி ரீ-ரிலீஸ் வசூலோடு ஒப்பிட்டு சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்