இந்தியா

இனிமே அதை பேச மாட்டோம்!. கனிமொழியிடம் வாக்குறுதி கொடுத்த ராகுல்காந்தி!

கடந்த சில நாட்களாகவே தங்களுக்கு ஆட்சி மற்றும் அதிகாரத்தில் திமுக பங்கு கொடுக்க வேண்டும் என காங்கிரஸில் உள்ள பிரவீன் சக்கரவர்த்தி, மாணிக்கம் தாகூர் எம்பி உள்ளிட்ட பலரும் பேசதுவங்கிவிட்டனர். ஆனால் காங்கிரசுக்கு ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு கொடுக்க முடியாது என்பதில் திமுக உறுதியாக இருக்கிறது..

எனவே திமுகவில் காங்கிரஸ் கூட்டணி தொடருமா என்கிற கேள்வியும் எழுந்தது. இந்நிலையில்தான் நேற்று டெல்லி சென்ற கனிமொழி எம்பி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார்.. அப்போது அவர் விரிவாக பல விஷயங்களையும் ராகுலிடம் பேசியிருப்பதாக சொல்லப்படுகிறது.

குறிப்பாக தமிழகத்தில் கூட்டணி கூட்டணி ஆட்சி என்பதை எப்போதும் தமிழக மக்கள் ஏற்றுக் கொண்டதில்லை.. தமிழகத்தில் இதுவரை அப்படி யாரும் கூட்டணி ஆட்சி நடத்தியதும் இல்லை.. இதற்கு முன் காங்கிரஸ் பல தொகுதிகளில் வெற்றி பெற்ற போதும் கூட கூட்டணி ஆட்சி இங்கே நடக்கவில்லை..

அதோடு 2029 பாராளுமன்ற தேர்தலில் உங்களை பிரதமராககவே நாங்கள் முயற்சி செய்து வருகிறோம்.. அதற்கான பணிகளை நாங்கள் செய்து வருகிறோம்.. எனவே நீங்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்’ என கனிமொழி சொல்ல ராகுலும் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டாராம்.. அதோடு ‘இனிமேல் ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு’ என்கிற கருத்தை பேச மாட்டோம் எனவும் அவர் கனிமொழியிடம் சொன்னதாக தெரிகிறது.

அதேநேரம் சட்டமன்ற தேர்தலில் அதிகமான தொகுதிகள், துணை சபாநாயகர் பதவி, வாரிய தலைவர் பதவிகள் மற்றும் உள்ளாட்சி தேர்தலில் அதிக தொகுதிகள் என்கிற சில கோரிக்கையை ராகுல் திமுகவிடம் வைத்திருப்பதாக தெரிகிறது.. இதைப்பற்றி திமுக ஆலோசனை செய்து காங்கிரஸுக்கு பதிலளிப்பார்கள் எனத் தெரிகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்