‘ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்’ திரைப்பட வரிசையின் ரசிகர்களுக்கு ஒரு உற்சாகமான செய்தி வெளியாகியுள்ளது. இந்த தொடரின் அடுத்த பிரம்மாண்ட திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை யுனிவர்சல் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. இந்த புதிய படத்திற்கு ‘ஃபாஸ்ட் ஃபாரெவர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படம் மார்ச் 17, 2028 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
லூயிஸ் லெட்டரியர் இயக்கத்தில் 2023-ல் வெளியான ‘ஃபாஸ்ட் எக்ஸ்’ படத்தின் தொடர்ச்சியாக இது அமையவுள்ளது. டோமினிக் டொரேட்டோ கதாபாத்திரத்தில் நடிக்கும் வின் டீசல், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த செய்தியை பகிர்ந்துள்ளார். ‘
2013-ல் மறைந்த தனது இணை நடிகர் பால் வாக்கருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, “மீண்டும் குடும்பம் இணைகிறது” என்று உருக்கமாக தெரிவித்துள்ளார். ‘ஃபாஸ்ட் ஃபாரெவர்’ இந்தப் புகழ்பெற்ற ஆக்ஷன் தொடரின் இறுதி பாகமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

