சினிமா

விஜயகாந்துக்கு அந்த நடிகை செட்டாகுமா? நல்ல வேளை படம் தப்பிச்சுச்சு

தமிழ் சினிமாவில் ரஜினி கமல் இவர்களுக்கு இணையாக போற்றப்படக்கூடிய நடிகராக இருந்தவர் கேப்டன் விஜயகாந்த். கிட்டத்தட்ட 150 படங்களுக்கு மேல் நடித்து மக்கள் மனதில் தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்தார். தமிழைத் தவிர வேறு எந்த மொழி படங்களிலும் அவர் நடிக்கவில்லை. அதற்கு காரணம் தமிழ் மீது அவர் கொண்ட பற்று. பிற மொழிகளில் இருந்து அவருக்கு பட வாய்ப்புகள் வந்தாலும் தமிழ் மீதும் தமிழ் மக்கள் மீதும் அவருக்கு இருந்த பற்றின் காரணமாகத்தான் வேறு எந்த மொழிகளிலும் அவர் நடிக்கவில்லை.

அதை தன்னுடைய நிறைய படங்களில் அதை வெளிப்படுத்தி இருக்கிறார். தமிழ் மக்களுக்கு ஏதாவது பிரச்சனைனா நான் சும்மா விடமாட்டேன் என அவர் அடிக்கடி கூறுவது தான் ஞாபகத்திற்கு வருகிறது. அதையே தன்னுடைய நிஜ வாழ்க்கையிலும் பின்பற்றினார். அதற்காகத்தான் அவர் அரசியலுக்கே வந்தார். ஆனால் மக்கள் அவரை பயன்படுத்திக் கொள்ள தவறிவிட்டனர் என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்த நிலையில் அவருடைய நடிப்பில் எத்தனையோ குடும்ப பாங்கான பல திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. அதில் குறிப்பிடத்தக்க படமாக சொல்ல வேண்டுமென்றால் வானத்தைப்போல திரைப்படத்தை சொல்லலாம். அண்ணன் தம்பி பாசத்தை மையமாக வைத்து விக்ரமன் இயக்கிய அந்தப் படம் 200 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடியது.

படத்தில் அமைந்த ஒவ்வொரு பாடலும் ரசிகர்களிடம் இன்று வரை நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. அந்தப் படத்தில் விஜயகாந்துக்கு ஜோடியாக மீனா நடித்திருப்பார். ஆனால் அவருக்கு முன்பு அந்த கேரக்டரில் நடிக்க வேண்டியது ஷில்பா ஷெட்டி என விக்ரமன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார் .போட்டோஷூட் எடுப்பதற்காக ஷில்பா ஷெட்டியை சென்னைக்கு வரவழைத்தாராம் விக்ரமன்.

ஆனால் இயக்குனர் எப்படிப்பட்டவர் என்பதை தெரிந்து கொள்ள ஷில்பா ஷெட்டி குஷ்புவிடம் விக்ரமனை பற்றி எல்லா விவரமும் தெரிந்த பிறகுதான் சென்னைக்கு வந்தாராம். போட்டோ சூட் வீடியோ எல்லாம் எடுத்த பிறகு அதை வானத்தைப்போல படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் பார்த்து இருக்கிறார். அவருக்கு அது செட்டே ஆகவில்லையாம். ஹிந்தி முகம் திரையில் பார்த்தாலும் அந்நியமாகத்தான் இருக்கும். அதனால் வேண்டாம் என ஆஸ்கார் ரவிச்சந்திரன் சொல்ல அதன் பிறகு தான் அந்த கேரக்டருக்குள் வந்திருக்கிறார் மீனா.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்