இந்தியா

விஜய் ஒரு கோழை!.. கிழித்து தொங்கவிட்ட எஸ்.வி.சேகர்!

திமுகவுக்கும், தவெகவுக்கும் இடையேதான் போட்டி என விஜய் சொல்வது அறியாமை.. என் பேரன் என்னிடம் வந்து ‘தாத்தா உனக்கும் எனக்கும் போட்டி’ என சொல்வது போல் இருக்கிறது. திமுக 70 வருடங்களாக நீடித்து நிற்கும் ஒரு கட்சி.. அவ்வளவு சுலபத்தில் அதை ஒழிக்க முடியாது.

முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே தேர்தலை குறி வைத்து தனது பிரச்சாரத்தை தொடங்கி விட்டார்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊரில் இருக்கிறார்.. உள்ளுக்குள் ஒரு நெருப்பு இருக்க வேண்டும். ஆனால் விஜய்க்கு அது இல்லை. இவர் வீட்டை விட்டே வெளியே வருவதில்லை. ஆனால் நான்தான் முதல்வர்.. வீட்டுக்கு ஒரு ஓட்டு இருக்கிறது என்கிறார்.இவர் சொல்லும் ரசிகர்கள் வந்து ஓட்டு கூட போட மாட்டார்கள். தேர்தல் நடைபெறும் போது வந்து விசில் அடித்து கிடைக்கும் வாக்குகளையும் கிடைத்து விடுவார்கள். நடிகருக்கு கூடும் கூட்டம் வேறு.. ஓட்டு போடுவது என்பது வேறு..கண்டிப்பாக இந்த தேர்தலில் திமுக மாபெரும் வெற்றியை பெரும் என அவர் கூறினார்.

மேலும் திமுக கூட்டணியில் இருக்கும் வரைக்கும்தான் காங்கிரசுக்கு மதிப்பு.. திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறினால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற மாட்டார்கள். 2029 பாராளுமன்ற தேர்தலில் ராகுல் பிரதமராக விரும்பினால் திமுக கூட்டணியில்தான் நீடிக்க வேண்டும்.

ஏனெனில் அந்த கூட்டணியை கட்டுப்படுத்துவது முக ஸ்டாலின்தான். திமுகவை ஒழிக்க வேண்டும் என பிரதமர் மோடி பேசுகிறார். 75 வருட அனுபவம் உள்ள கட்சியை 30 வருடங்களுக்கு முன்பு வந்த ஒரு கட்சியால் ஒழித்துவிட முடியாது. புரியாமல் பேசிக் கொண்டிருக்கிறார்கள்’ என அவர் சொல்லியிருக்கிறார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்