இந்தியா

11 வருஷமா ஒன்னுமே கொடுக்கல!.. ரிசல்ட் தெரியும் போல!.. பாஜகவை விமர்சிக்கும் ஸ்டாலின்!

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் துவங்கி 10 முகாம்கள் நிறைவடைந்துள்ளது. இது தொடர்பான விழாவில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். அந்த விழாவில் திமுக ஸ்டாலின் பேசியதாவது;

நாம் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்டு வந்தால் மற்றொரு பக்கம் பாஜகவும் அதனுடைய கூட்டாளிகளும் வளர்ச்சியை தடுப்பதற்கு என்னென்ன செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு முக்கிய உதாரணம்தான் சமீபத்தில் வெளியான பட்ஜெட். இந்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு என்று எதுவுமில்லை. வழக்கமாக திருக்குறள் சொல்லி ஏமாற்றுவார்கள். இந்த ஆண்டு அதையும் சொல்லவில்லை.. பல வருடங்களாக நாம் சொல்லிவரும் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை.

வழக்கமாக தேர்தல் வந்தால் அந்த மாநிலத்தில் வாக்குகளை பெற வேண்டும் என்பதற்காக பாஜக அள்ளிக் கொடுப்பார்கள். ஆனால் தமிழகத்தில் தேர்தல் வரும் நிலையிலும் தமிழ்நாட்டு மக்களுக்கு அவர்கள் எதுவும் செய்யவில்லை.. அவ்வளவு வெறுப்பு.

தமிழ்நாட்டுக்கு புதிய நெடுஞ்சாலைகள், ரயில்வே வழித்தடங்கள், மெட்ரோ ரயில் என பல கட்டமைப்பு வசதிகள் தேவை.. ஆனால் மத்திய அரசு நமக்கு எதுவும் கொடுப்பதில்லை. அதிக வரி வருவாய் வழங்குகிற தமிழ்நாட்டுக்கு மிகவும் சொற்பமான நிதியை திருப்பி கொடுக்கிறார்கள்.

11 வருடங்களாக இப்படித்தான் தமிழகத்தை வஞ்சித்து வருகிறார்கள்.. எப்படியும் தேர்தலில் நம் தோற்கத்தான் போகிறோம். தமிழ்நாட்டுக்கு கொடுக்க வேண்டாம் என நினைத்து விட்டார்கள்… அதுதான் உண்மை’ என்று பேசியிருக்கிறார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்