சினிமா

அஜித் கோபப்பட்டதற்கு பின்னனியில் இருக்கும் காரணம்..

தற்போது அஜித், அவருடைய  ரசிகர்களின் செயலால் கடுப்பாகி கத்திய ஒரு வீடியோ தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. அபுதாபியில் தனது அணியுடன் கார் ரேசில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் அஜித். இதற்கு முன்பு துபாயில் நடந்த கார் ரேஸில் ஈடுபட்டு அஜித் அணி மூன்றாவது இடத்தை தக்கவைத்துக் கொண்டது. அதற்கு அடுத்தபடியாக அபுதாபியில் நடக்கும் கார் ரேசில் கலந்து கொண்டு வருகிறார். அவரை பார்க்க நாள்தோறும் ரசிகர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகின்றது.

இதற்கிடையில் பிரபலங்களின் வருகையும் இன்னும் கூட்டத்தை அதிகப்படுத்திக் கொண்டே இருக்கின்றது. ஒவ்வொரு நாளும் அஜித்தை பார்க்க திரையுலகை சார்ந்த பல பிரபலங்கள் வந்து கொண்டே இருக்கின்றனர். சிவகார்த்திகேயன் வெங்கட் பிரபு மஞ்சு வாரியார் அனிருத் என முன்னணியில் இருக்கும் நட்சத்திரங்கள் அஜித்தை பார்க்க வருகை தந்து இருக்கின்றனர். இவர்களைப் பார்க்கவும் ஒரு பக்கம் ரசிகர்கள் கூட்டமாக வருவதை பார்க்க முடிகிறது.
இதற்கிடையில் நேற்று ஒரு ரசிகரின் செயலால் கடுப்பாகி அஜித் கத்திய ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. அதாவது ஒழுங்காக நடந்து கொள்ளுங்கள். இது ஒன்றும் தியேட்டர் கிடையாது. மானம் போகுது என்றெல்லாம் கோபப்பட்டு கத்தினார் அஜித். அப்படி என்னதான் நடந்தது என்று பார்க்கும் பொழுது அங்கிருந்து ஒருவர் ஒரு வீடியோவை வெளியிட்டு முழு விவரத்தையும் பேசியுள்ளார். அதாவது அஜித்துடன் போட்டோ எடுக்க வேண்டும், அவரைப் பார்க்க வேண்டும் என ரசிகர்கள் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கின்றனர்.
அதன் அடிப்படையில் நேற்றும் அஜித்தை பார்க்க ஏராளமான பேர் வந்திருந்தனர். அதில் கூட்டம் அதிகரித்ததால் அங்கிருந்த கார்கள் மீது ஏறியும் கார்களுக்கு சேதம் விளைவிக்கும் வகையிலும் ரசிகர்கள் நடந்திருக்கின்றனர். அது மட்டுமல்ல ஒரு சில ரசிகர்கள் குடித்துவிட்டு அங்கு வந்துள்ளதாக தெரிகிறது. இதனால் மற்ற அணியினரின் காரும் சேதமாகி இருக்கின்றன. இதனால்தான் அஜித் மிகவும் கடுப்பாகி இருக்கிறார்.
அது மட்டுமல்ல இப்படி ரசிகர்களின் செயலால் மற்ற அணியினருக்கு இன்னும் பெரிய அளவில் சேதம் விளைவித்தால் அது அஜித் அணியை பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். அதோடு அஜித் அணி சார்பாக பெனால்டி கட்ட வேண்டிய சூழ்நிலையும் உருவாகும். இதனால் தான் அஜித், மானம் போகுது, இது ஒன்னும் தியேட்டர் கிடையாது என்றெல்லாம் கோபப்பட்டு பேசியிருக்கிறார். அதனால் ரசிகர்கள் தயவு செய்து அஜீத் சாருக்கு சப்போர்ட் பண்ணுங்க, அவரைப் பார்க்க வாங்க, வந்து புகைப்படம் எடுத்துக்கோங்க, ஆனால் நாகரீகமாக நடந்துக்கோங்க என்று அந்த வீடியோவில் அந்த நபர் பேசியுள்ளார் .

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்