எம்ஜிஆர் காலத்திலிருந்து திமுகவில் இருப்பவர் துரைமுருகன். கலைஞருக்கு மிகவும் நெருக்கமானவர். கலைஞரின் வலது கரமாக இருந்தவர். தற்போது திமுகவின் பொதுச் செயலாளராக இருக்கிறார் துரைமுருகன். கட்சியில் முக்கிய முடிவு எடுப்பது, முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவது, முக ஸ்டாலினுக்கு ஆலோசனை செய்வது என திமுகவில் இவரின் பங்கு மிகவும் அதிகம்.
துரைமுருகனை சட்டக் கல்வி படிக்க வைத்தது எம்ஜிஆர்தான். நடிகராக ஆசைப்பட்ட துரைமுருகனை தடுத்து அவரை படிக்கவைத்தார்/. கல்விக்கான முழு செலவையும் எம்ஜிஆர்தான் ஏற்றுக்கொண்டார். ஆனாலும் எம்ஜிஆரை விட்டு கலைஞர் கருணாநிதி பக்கம் வந்து விட்டார் துரைமுருகன். 1971ம் வருடம் முதல் முதலாக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதுவரை 8 முறை எம்எல்ஏவாக இருந்திருக்கிறார்.
தற்போது அவருக்கு 87 வயது ஆகிறது. ஆனாலும் திமுகவில் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார்.. கடந்த சில வருடங்களாகவே துரைமுருகன் உடல் நலம் பாதிக்கப்பட்டு அடிக்கடி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதுண்டு. இந்நிலையில், திடீரென தற்போது சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் துறைமுருகன் அனுமதிக்கப்பட்டார்.
வீட்டில் தவறி கீழே விழுந்து காயம் அடைந்ததால் அவர் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது.

