விளையாட்டு

சானியா மிர்சாவின் ஸ்லிம் ரகசியங்கள்.. காலை முதல் இரவு வரை என்ன சாப்பிடுகிறார்?

டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா, 2023-ல் ஓய்வு பெற்ற பிறகு தனது உடல்நலம் மற்றும் சரும பராமரிப்பு ரகசியங்களை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். தற்போது தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் வழிகாட்டியாக பணியாற்றும் அவர், தனது உணவு முறையில் புரதச்சத்திற்கு முக்கியத்துவம் அளிக்கிறார். காலையில் இஞ்சி, மஞ்சள், தேன், எலுமிச்சை மற்றும் கருஞ்சீரகம் கலந்த ஆரோக்கிய பானத்துடன் தனது நாளை தொடங்குகிறார். பிறகு ஊறவைத்த சியா விதைகள் மற்றும் காபி குடித்துவிட்டு ஜிம்மிற்கு செல்கிறார்.

முன்பு இட்லி, தோசை என மாவுச்சத்து அதிகமுள்ள உணவுகளை உட்கொண்டவர், இப்போது உடற்பயிற்சி குறைந்திருப்பதால் முட்டையின் வெள்ளைக்கரு உள்ளிட்ட புரத உணவுகளையே அதிகம் எடுத்துக்கொள்கிறார்.

சருமப் பராமரிப்பை பொறுத்தவரை, காலையிலும் இரவிலும் தலா 10 நிலைகளை கொண்ட ‘கொரியன் ஸ்கின்கேர்’ முறையை பின்பற்றுகிறார். கடந்த ஓராண்டாக ‘ரெட் லைட் தெரபி’  மூலம் தனது சருமத்தையும் கூந்தலையும் பொலிவாக்கி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். முறையான உடற்பயிற்சி மற்றும் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதை அவர் ஒருபோதும் மறப்பதில்லை.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

விளையாட்டு

பெர்த் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் ஏற்பட்ட மாற்றம் என்ன?

இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைபெற்றது. இதில்
விளையாட்டு

பேட்டிங் வரிசையில் ஏற்றம் இறக்கம்: சுந்தர் அளித்த பதில்..!

இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் தொடரில் இந்தியா தடுமாறி வருகிறது. முதல் போட்டியில் தோல்வியடைந்த நிலையில், 2-வது போட்டியில் மோசமான நிலையில் உள்ளது. முதல் போட்டியில் யாரும்