இந்தியா

இது திமுக கோட்டைன்னு நிரூபிச்சு காட்டணும்!.. முக ஸ்டாலின் பேச்சு!

தமிழக சட்டசபை தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் வேகம் காட்டி வருகிறது. அதிமுக மற்றும் திமுக இரண்டு கட்சிகளும் ஏறக்குறைய கூட்டணிகளை உறுதி செய்துவிட்டன. திமுக – காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு குறித்து விவாதிக்கவில்லை என்றாலும் திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கும் என்பது உறுதியாகியிருக்கிறது. இருக்கிறது.

ஏற்கனவே 2001 முதல் 2021 வரை இரண்டு முறையும் தேர்தலில் தோல்வியடைந்தது திமுக. அதே நேரம் 2021 தேர்தலில் திமுக வெற்றி பெற்று முக ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றார். அதிமுக பலவீனமாக இருப்பதாக கருதப்படும் நிலையில் இந்த முறையும் எப்படியாவது ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என முக ஸ்டாலின் கருதுகிறார்.

இந்நிலையில் திருவிடந்தையில் நடைபெற்ற திமுக வாக்குச்சாவடி முகவர்கள் மாநாட்டில் பேசிய முதல்வர் ஸ்டாலின் ‘சென்னையும், வட தமிழ்நாடும் எப்போதும் திமுகவின் கோட்டை என மீண்டும் நாம் நிரூபித்து காட்ட வேண்டும்.. எப்போதும் போல உங்களிடமிருந்துதான் வெற்றியை தொடங்கப் போகிறேன்.. அதனால் இந்த மண்டலத்திலிருந்து கூட்டத்தை தொடங்குகிறேன்’ என பேசியிருக்கிறார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்