மும்பையை சேர்ந்த ரிஷப் அகர்வால் என்பவர், தனது தங்கையை சரியான நேரத்தில் எழுப்ப ஒரு வினோதமான முயற்சியை மேற்கொண்டுள்ளார்.
அவரது தங்கை அதிகாலை விமானத்தை பிடிக்க வேண்டியிருந்த நிலையில், அவர் தனது செல்போனில் வைத்த 3 மணி அலாரம், போன் ‘சுவிட்ச் ஆஃப்’ ஆனதால் அடிக்கவில்லை. தங்கை தூங்கிவிடுவார் என்ற பயத்தில், அவரை எழுப்ப ரிஷப் ஒரு புதுமையான வழியை கையாண்டார்.
அவர் Zepto என்ற டெலிவரி நிறுவனத்தை அணுகி, உணவு பொருட்களை ஆர்டர் செய்து, அதன் மூலம் டெலிவரி ஊழியரை தங்கையின் வீட்டிற்கு அனுப்பியுள்ளார். சுமார் 40 நிமிடங்கள் பயணம் செய்து அந்த ஊழியர் வீட்டு கதவை தட்டி தங்கையை எழுப்பியுள்ளார்.
இந்த வினோதமான ஐடியா மூலம் அவரது தங்கை சரியான நேரத்தில் விமான நிலையத்தை அடைய முடிந்தது. அவசர தேவைக்கு டெலிவரி செயலியை அலாரமாக பயன்படுத்திய இந்த செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

