தமிழ் சினிமா மட்டுமில்லாமல் இந்திய சினிமாவிலும் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் ரஜினி. பல மொழி நடிகர்களும் இவரை தலைவர் அழைக்கிறார்கள்.. 50 வருடங்களாகியும் இன்னமும் சூப்பர் ஸ்டாரக இருக்கிறார்.. இன்னமும் ரசிகர்களை கவறும்படி திரைப்படங்களில் நடிக்கிறார்.
74 வயதாகியும் இன்னமும் ஆக்டிவாக சினிமாவில் நடித்து வருகிறார்.. ரஜினி இப்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார்.. இந்த படத்திற்கு பின்னர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்த படத்திற்கு பின் ரெட் ஜெயண்ட் தயாரிப்பில் கமலுடன் இணைந்து ஒரு புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார் ரஜினி. இந்த படத்திற்கு ரஜினிக்கு 225 கோடி சம்பளம் பேசப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கு பின்னணியில் ஒரு காரணம் இருப்பதாக தெரிகிறது .கடந்த சில வருடங்களில் சம்பளத்தில் ரஜினியை தாண்டி விட்டார் விஜய். உதாரணத்திற்கு ஜனநாயகன் படத்தில் அவர் வாங்கிய சம்பளம் 220 கோடி. ஆனால் ஜெயிலர் 2 படத்தில் நடிக்க ரஜினி 150 கோடி சம்பளம் வாங்கியிருக்கிறார்.
இந்நிலையில்தான், விஜயை விட அதிக சம்பளம் வாங்கியதாக நாம் இருக்க வேண்டும் என ரஜினி நினைத்தாரோ என்னவோ தெரியவில்லை.. கமலுடன் இணையும் படத்தில் 225 கோடி சம்பளம் பேசியிருக்கிறார் என்கிறார்கள்.

