சினிமா

ரஜினி ஃபேன்ஸ் பி ரெடி!.. ஜெயிலர் 2 சீக்கிரமாவே வருது!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கி ரஜினி நடித்துள்ள திரைப்படம் ஜெயிலர் 2. இந்த படத்தின் முதல் பாகம் சூப்பர் ஹிட் அடித்ததால் இரண்டாம் பாகத்தை உருவாக்கி வருகிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். முதல் பாகத்தை போலவே இந்த படத்திலும் பல மொழிகளிலிருந்து நடிகர்கள் நடிக்கிறார்கள்.

மோகன்லால், சிவ்ராஜ்குமார், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலரும் நடிக்க யோகி பாபு, சந்தானம் ஆகியோரும் இந்த படத்தில் காமெடி செய்திருக்கிறார்கள். ஜெயிலர் 2 திரைப்படத்தை ஆகஸ்ட் மாதமே வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால் படத்தின் வேலைகள் வேகமாக முடிந்து விட்டதால் ஜூன் மாதமே வெளியாக வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

ஜெயிலர் 2 படத்தில் ரஜினி நடிக்கும் காட்சிகள் முடிந்துவிட்டது.. அடுத்து சிபி சக்கரவர்த்தி இயக்கவுள்ள படத்தில் ரஜினி நடிக்கவுள்ளார். அந்த படத்தை முடித்துவிட்டு கமலுடன் இணைந்து ஒரு புதிய படத்தில் ரஜினி நடிக்கவிருக்கிறார். அந்த படத்தையும் நெல்சன்தான் இயக்கவுள்ளார். சமீபத்தில் இந்த படத்திற்கான புரமோ ஷூட் நடந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்