மணிரத்தினம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய், சரத்குமார், விக்ரம், கார்த்தி, ரவி மோகன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இரண்டு பாகங்களாக வெளிவந்த திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது.
இந்நிலையில், பொன்னியின் செல்வன் 2ம் பாகத்தில் ல் இடம் பெற்ற ‘வீர ராஜ வீரர்’ என்கிற பாடல் தன்னுடைய தந்தை நசீர் பயாசுதீன் தாகர் மற்றும் தனது மாமா ஜாகிருதீன் தாகர் ஆகியோர் இணைந்து இசையமைத்த சிவ ஸ்துதி பாடலில் இருந்து காப்பியடிக்கப்பட்டதாக பத்மஸ்ரீ விருது பெற்ற ஹிந்துஸ்தானி பாடகர் பையாஸ் வசிபுதத்தீன் தாகர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஏ ஆர் ரகுமானுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது.. ஆனால் அதை எதிர்த்து பாடகர் பையாஸ் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அவர்கள் எதிர்பார்ப்பது கொஞ்சம் மரியாதையும் அங்கீகாரத்தையும்தான்.
எனவே ஏஆர் ரகுமான் இரண்டு கோடியை டெல்லி உயர்நீதிமன்றத்தின் பதிவாளர் அலுவலகத்தில் கட்ட வேண்டும் என சொல்லி இந்த வழக்கை வருகிற 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

