‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படத்தில் ‘மாரியம்மா’ என்ற அழுத்தமான கதாபாத்திரத்தின் மூலம் அறிமுகமான துஷாரா விஜயன், தமிழ் சினிமாவில் திறமையான நடிகையாக அறியப்படுகிறார். தொடர்ந்து ‘நட்சத்திரம் நகர்கிறது’, ‘ராயன்’, ‘வேட்டையன்’ என இவர் நடித்த அனைத்து படங்களிலுமே துணிச்சலான மற்றும் கனமான கதாபாத்திரங்களையே தேர்ந்தெடுத்து நடித்தார்.’
நடிப்பிற்கு முக்கியத்துவம் தரும் பாத்திரங்களில் மட்டுமே தோன்றி வந்த அவர், தற்போது திடீரென ஒரு கவர்ச்சிப் பாடலில் நடித்திருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பால் ஜார்ஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காட்டாளன்’ திரைப்படத்தின் பாடல் போஸ்டர் ஒன்று சமீபத்தில் வெளியானது. அதில் இரண்டு நடிகைகள் பின்புறமாக திரும்பி நிற்கும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. அந்த புகைப் படத்தில் இருப்பது துஷாரா விஜயனா என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதுவரை குடும்பப்பாங்கான மற்றும் யதார்த்தமான கதாபாத்திரங்களில் பார்த்து பழகிய ரசிகர்கள், அவரது இந்த திடீர் மாற்றத்தை கண்டு ஆச்சரியமடைந்துள்ளனர். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால் மட்டுமே அந்த புகைப் படத்தில் இருப்பது அவரா என்பது உறுதியாகும்.

