கடந்த சில வருடங்களாகவே காப்புரிமையின் அடிப்படையில் இசையமைப்பாளர் இளையராஜா அவர் இசையமைத்த பாடல்களை அவரின் அனுமதியில்லாமல் வியாபாரரீதியாக திரைப்படங்களில் பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
இளையராஜா இசையமைத்த பாடல்களின் உரிமைகளை படத்தின் தயாரிப்பாளர் ஆடியோ நிறுவனங்களுக்கு விற்று விட்டார். அதேநேரம் அந்த படங்களில் உரிமை என்னிடம்தான் இருக்கிறது.. அதை வியாபார ரீதியாக திரைப்படங்களில் பயன்படுத்தக் கூடாது என வழக்கு தொடர்ந்து வருகிறார் இளையராஜா.
இதற்காக விமர்சனங்களையும் இளையராஜா எதிர் கொண்டார். இந்நிலையில் பிரபல ஆடியோ நிறுவனங்களில் ஒன்றான சரிகம நிறுவனத்திற்கும் இளையராஜாவுக்கும் இடையே காப்புரிமை தொடர்பான வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

