சினிமா

1000 கோடி வியாபாரம்!..! ஜனநாயகன் தயாரிப்பாளருக்கு கை கொடுத்த Toxic!

கன்னடத்தில் ஏற்கனவே சில படங்களில் நடித்திருந்தாலும் KGF திரைப்படம் மூலம் பேன் இந்தியா நடிகராக இந்திய அளவில் பிரபலமானவர்தான் யாஷ். KGF மற்றும் KGF2 இரண்டு பாகங்களும் பேன் இண்டியா அசத்தலான வெற்றியை பெற்றது.

எனவே KGF3 எப்போது வரும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்..

நடிகர் யாஷ் தற்போது கீத்து மோகன்தாஸ் என்கிற பெண் இயக்குனரின் இயக்கத்தில் டாக்ஸிக் என்கிற திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.இந்த படத்தில் யாஷ் ஹீரோவாக நடித்த தாரா சுட்டார்யா, ருக்மணி வசந்த் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளிலும் வெளியாகிறது.

இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. வருகிற 19ம் தேதி இந்த திரைப்படம் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

இந்த படத்தை விஜயின் ஜனநாயகன் படத்தை தயாரித்த கேவிஎன் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படத்தின் பட்ஜெட் 400 கோடி என சொல்லப்படுகிறது. ஆனால் இந்த படத்தின் வியாபாரம் 1000 கோடியை தொட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது ஓவர்சீஸ் என சொல்லப்படும் வெளிநாட்டு உரிமையை 105 கோடிக்கும், இந்தியாவில் தியேட்டர்களில் வெளியிடும் உரிமை 650 கோடி மற்றும் டிவி உரிமை மற்றும் ஓட்டி உரிமை எல்லாம் சேர்த்தால் கண்டிப்பாக இப்படம் 1000 கோடி வியாபாரத்தை தொட்டிருக்கும் என்கிறார்கள்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்