விஜய் ஹீரோவாக நடித்து மமிதா பைஜூ முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் திரைப்படம் ஜனநாயகன். மேலும், பூஜா ஹெக்டேவும் இந்த படத்தில் நடித்திருக்கிறார். தெலுங்கில் பாலையா நடித்து வெளியான பகவந்த் கேசரி படத்தின் மூலக்கதையை எடுத்து தமிழுக்கும், விஜய்க்கும் ஏற்றவாறு மாற்றி இந்த படத்தின் கதை திரைக்கதை உருவாக்கியிருக்கிறார் ஹெச்.வினோத்.
கடந்த ஜனவரி 9ம் தேதி இந்த படத்தை வெளியிட திட்டமிட்டு தணிக்கை வாரியம் செய்த பிரச்சினையால் இதுவரை வெளியாகவில்லை.. சமீபத்தில் இந்த படம் தொடர்பான வழக்கையும் தயாரிப்பாளர் வாபஸ் பெற்றார். ஆனாலும் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகியும் இப்போது வரை இந்த படம் மறுத்தணிக்கை செய்யப்படவில்லை.. எனவே இந்த மாத இறுதிக்குள் படங்கள் வெளியாகும் என்பதும் சந்தேகமாகவே இருக்கிறது.
இந்நிலையில்தான், விஜயின் பிறந்த நாள் ஜூன் 22ம் தேதி படத்தை வெளியிடலாமா என தயாரிப்பாளர் யோசிக்கிறாராம். ஏனெனில் ஜூன் 26 ஆம் தேதி முகரம் பண்டிகை விடுமுறை, அதற்கு அடுத்த இரண்டு நாள் சனி, ஞாயிறு விடுமுறை வருவதால் தொடர்ந்து 3 நாட்கள் தியேட்டர்களில் ஐந்து காட்சிகள் திரையிட முடியும். அதன் மூலம் நல்ல வசூலையும் அள்ளமுடியும் என நம்புகிறராம்.

