இந்தியா

கமல் பேசுறது புரியலயா?!. புது விளக்கம் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்!

நடிகர் கமல் பல வருடங்களாகவே தூய தமிழில் பேசி வருகிறார். அப்படி பேசுவதில்தான் அவருக்கு ஆர்வமும் அதிகம். ஆனால் அப்படி பேசுவது பலருக்கும் புரியவில்லை என்கிற விமர்சனம் அவர் மீது இருக்கிறது.. கமல் பேசினாலே புரியாது என பலரும் அவரை நக்கலடிப்பதுண்டு.

ஆனால், கமல் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை. தொடர்ந்து தூய தமிழில் பேசி வருகிறார். சில நாட்களுக்கு முன்பு கூட பாராளுமன்றத்தில் தமிழை கற்றுக் கொண்டால் பிச்சைதான் எடுக்க முடியும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சொல்லியதற்கு பதிலடி கொடுத்த கமல்ஹாசன் தூய தமிழில் அதிக நேரம் பேசினார்.

அது பாராளுமன்றத்தில் இருந்து யாருக்கும் புரியவில்லை என சொல்லப்பட்டது. இது பற்றி கருத்து தெரிவித்து வானதிது சீனிவாசனும் கமல் பேசியது எனக்கு புரியவில்லை எனக் கூறியிருந்தார்.. மேலும், அவர் பேசியது புரியாததால்தான் கோவையில் அவரை மக்கள் தோற்கடித்துவிட்டனர் என பேசியிருந்தார்.

இந்நிலையில், இன்று மதுரையில் நடந்த திமுக மாநாட்டில் இது பற்றி விளக்கமளித்த திமுக தலைவர் முக ஸ்டாலின் ‘சில பேர் கமல் பேசுவது புரியவில்லை என்பார்கள்.. அவர்களுக்கு புரியாமல் இல்லை.. புரிந்துகொள்ள கூடாது என நினைக்கிறார்கள்.. இப்போது நாடாளுமன்ற மைக்கிலும் கமல்.. கமல் என புலம்ப வைத்துவிட்டார்.. அதற்காக என் பாராட்டுக்கள்.. வாழ்த்துக்கள்’ எனக் கூறியிருக்கிறார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்