விளையாட்டு

தோல்வி அடைந்தாலும் டி20 உலகக்கோப்பையில் பும்ரா செய்த சாதனை!

அகமதாபாத்தில் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டி20 உலகக்கோப்பை 2026 சூப்பர் 8 சுற்றில், இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா புதிய வரலாறு படைத்துள்ளார்.

இப்போட்டியில் 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், டி20 உலகக்கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை அதாவ்து 33 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். இதன் மூலம் ரவிச்சந்திரன் அஸ்வினின் சாதனையை அவர் முறியடித்துள்ளார்.
பும்ராவின் இந்த அபாரமான சாதனை இந்திய அணிக்கு பெரும் உத்வேகத்தை அளித்துள்ளது. 32 வயதான பும்ரா, வெறும் 22 போட்டிகளிலேயே இந்த மைல்கல்லை எட்டி தனது உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சை மீண்டும் நிரூபித்துள்ளார்.
அதேபோல் பேட்டிங்கில் தொடர்ச்சியாக மூன்று முறை டக்-அவுட் ஆகியிருந்த இளம் வீரர் அபிஷேக் சர்மா, இப்போட்டியில் 15 ரன்கள் எடுத்து தனது ரன் கணக்கை தொடங்கினார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

விளையாட்டு

பெர்த் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் ஏற்பட்ட மாற்றம் என்ன?

இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைபெற்றது. இதில்
விளையாட்டு

பேட்டிங் வரிசையில் ஏற்றம் இறக்கம்: சுந்தர் அளித்த பதில்..!

இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் தொடரில் இந்தியா தடுமாறி வருகிறது. முதல் போட்டியில் தோல்வியடைந்த நிலையில், 2-வது போட்டியில் மோசமான நிலையில் உள்ளது. முதல் போட்டியில் யாரும்