உலகம்

இரு பெண்களுடன் இருக்கும் ஸ்டீபன் ஹாக்கிங் புகைப்படம்.. எப்ஸ்டீன் ஃபைல்ஸ் பரபரப்பும், குடும்பத்தினரின் விளக்கமும்..!

மறைந்த புகழ்பெற்ற இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங், சர்ச்சைக்குரிய தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான கோப்புகளில் இடம்பெற்றுள்ளது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

2006-ம் ஆண்டு கரீபியன் தீவுகளில் நடந்த அறிவியல் கருத்தரங்கின் போது, ஹாக்கிங் இரு பெண்களுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

அந்த பெண்கள் ஹாக்கிங்கின் நீண்டகால மருத்துவப் பணியாளர்கள் என்றும், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவருக்கு 24 மணிநேர மருத்துவ உதவி தேவைப்பட்டதால் அவர்கள் அவருடன் இருந்ததாகவும் அவரது குடும்பத்தினர் விளக்கம் அளித்துள்ளனர்.

இந்த கோப்புகளில் ஹாக்கிங் பெயர் பலமுறை குறிப்பிடப்பட்டாலும், அவர் மீதான தவறான நடத்தை குற்றச்சாட்டுகளை எப்ஸ்டீன் மறுத்ததற்கான ஆதாரங்களும் உள்ளன.

எப்ஸ்டீன் வழங்கிய நிதியில் நடத்தப்பட்ட அந்த மாநாட்டில் ஹாக்கிங் பங்கேற்றது உண்மைதான் என்றாலும், அவர் எந்தவொரு தவறான செயலிலும் ஈடுபடவில்லை என்றும், அவர் மீதான அவதூறுகள் ஆதாரமற்றவை என்றும் அவரது தரப்பு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம்

அமெரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதி டிக் செனி மறைவு

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் டிக் செனி.(84) இவர் அமெரிக்காவின் 46வது துணை ஜனாதிபதி ஆவார். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இவர் 2001 முதல் 2009-ம்
உலகம்

செய்யாத குற்றத்திற்காக 43 ஆண்டுகள் சிறையில் இருந்த இந்திய வம்சாவளி நபரின் நாடுகடத்தல் நிறுத்திவைப்பு

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 64 வயதான சுப்பிரமணியம் வேதம், தனது நண்பரைக் கொலை செய்ததாக குற்றம்சட்டப்பட்ட வழக்கில் 1980 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்றார். எந்த