உலகம்

துபாய் மீது ஈரான் அதிரடி தாக்குதல்: உலக புகழ்பெற்ற புர்ஜ் அல் அரப் சேதம்!

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரான் ஏவிய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் துபாய் மற்றும் அபுதாபி உள்ளிட்ட வளைகுடா நாடுகளை தாக்கின. உலகின் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான துபாய் சர்வதேச விமான நிலையம் இந்த தாக்குதலில் சேதமடைந்தது. இதில் நான்கு பேர் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், துபாயின் அடையாளமாக திகழும் ஏழு நட்சத்திர ஹோட்டலான ‘புர்ஜ் அல் அரப்’ கட்டிடத்தின் ஒரு பகுதியில், இடைமறிக்கப்பட்ட ட்ரோன் பாகங்கள் விழுந்ததில் தீ விபத்து ஏற்பட்டது.

அபுதாபி சர்வதேச விமான நிலையத்திலும் நடந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததாகவும், ஏழு பேர் காயமடைந்ததாகவும் முதற்கட்டத் தகவல்கள் வெளியாகின.

துபாயின் ஜெபல் அலி துறைமுகத்திலும் ஏவுகணை பாகங்கள் விழுந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த தாக்குதலை தொடர்ந்து, மத்திய கிழக்கின் வான்வெளி பகுதி போர்க்களமாக மாறியுள்ளதால், துபாய் மற்றும் அபுதாபி நோக்கிய அனைத்து விமான சேவைகளும் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஈரானின் இந்த தாக்குதல் வளைகுடா நாடுகளின் பொருளாதாரம் மற்றும் சுற்றுலா துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம்

அமெரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதி டிக் செனி மறைவு

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் டிக் செனி.(84) இவர் அமெரிக்காவின் 46வது துணை ஜனாதிபதி ஆவார். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இவர் 2001 முதல் 2009-ம்
உலகம்

செய்யாத குற்றத்திற்காக 43 ஆண்டுகள் சிறையில் இருந்த இந்திய வம்சாவளி நபரின் நாடுகடத்தல் நிறுத்திவைப்பு

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 64 வயதான சுப்பிரமணியம் வேதம், தனது நண்பரைக் கொலை செய்ததாக குற்றம்சட்டப்பட்ட வழக்கில் 1980 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்றார். எந்த