சினிமா உலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நடிகர் சூர்யாவின் அடுத்த படத்தின் டைட்டில் மற்றும் ‘ஃபர்ஸ்ட் லுக்’ போஸ்டர் வெளியாகியுள்ளது.
வெங்கி அட்லுரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் இப்படத்திற்கு ‘விஸ்வநாத் & சன்ஸ்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடிக்கிறார்.
வெளியான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில், சூர்யா ஒரு குழந்தையை தூக்கிக்கொண்டு புன்னகையுடன் இருக்கும் காட்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வைரலாகி வருகிறது.
ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கும் இப்படம் ஒரு குடும்ப பாங்கான கதையம்சத்தை கொண்டது என்பதை போஸ்டர் உறுதிப்படுத்துகிறது. இப்படம் வரும் ஜூலை மாதம் திரையரங்குகளில் ரிலீஸாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
சித்தாரா என்டர்டைன்மென்ட்ஸ் மற்றும் பார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன.

