உலகம்

எங்க டார்கெட் அமெரிக்கா மட்டும்தான்!.. ஈரான் சொன்ன விஷயத்தை பாருங்க!

கடந்த சில நாட்களாகவே ஈரான் நாட்டின் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் கூட்டு தாக்குதலை நடத்தி வருகிறது.. அதில் ஈரானின் தலைநகர் தெஹ்ரான் உள்பட பல பகுதிகளில் கடும் தாக்குதலை சந்தித்துள்ளது. ஈரானில் 600-க்கும் மேற்பட்டோர் போரில் உயிரிழந்துவிட்டனர்.

அதேபோல் ஈரானின் தலைவர் கமேனி கொல்லப்பட்டார்.. இதற்கு பழி வாங்கும் விதமாக அமெரிக்க ராணுவ தடங்கள் அமைந்திருக்கும் வளைகுடா நாடுகளின் மீதும், இஸ்ரேல் மீதும் ஈரான் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், அபுதாபி, குவைத் உள்ளிட்ட நாடுகளில் அமெரிக்க ராணுவ தளங்கள் அமைந்துள்ள கட்டமைப்புகளில் ஈரான் கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது.

இதன்காரணமாக வளைகுடா நாடுகளில் பதட்டம் ஏற்பட்டிருக்கிறது.. அங்கு வசிக்கும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.. சவுதி அரேபியாவில் விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டிருக்கிறது.. அங்கு பல ஆயிரம் பேர் விமான நிலையத்தில் முடங்கி இருக்கிறார்கள்.

இந்நிலையில் போர் பற்றி கருத்து தெரிவித்த ஈரான் வெளியுறவு அமைச்சகம் ‘ஈரான் மீது போர் திணிக்கப்பட்டிருக்கிறது.. அண்டை நாடுகளின் மண்ணை பயன்படுத்தி அமெரிக்கா ஈரானை தாக்குவது ஏற்க முடியாது.. தற்காப்புக்காக பதிலடி கொடுக்கும் எல்லா உரிமையும் ஈரானுக்கு உள்ளது.. எங்களின் நடவடிக்கைகள் அண்டை நாடுகளுக்கு எதிரானது அல்ல.. அமெரிக்க படைகளுக்கு எதிரானது.. மத்திய கிழக்கின் பாதுகாப்பிற்காக ஈரான் அளவு எந்த நாடும் உழைத்தது கிடையாது.. இந்த சோதனையான காலகட்டத்தை வெற்றிகரமாக கடப்போம்’ என கூறியிருக்கிறது.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம்

அமெரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதி டிக் செனி மறைவு

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் டிக் செனி.(84) இவர் அமெரிக்காவின் 46வது துணை ஜனாதிபதி ஆவார். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இவர் 2001 முதல் 2009-ம்
உலகம்

செய்யாத குற்றத்திற்காக 43 ஆண்டுகள் சிறையில் இருந்த இந்திய வம்சாவளி நபரின் நாடுகடத்தல் நிறுத்திவைப்பு

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 64 வயதான சுப்பிரமணியம் வேதம், தனது நண்பரைக் கொலை செய்ததாக குற்றம்சட்டப்பட்ட வழக்கில் 1980 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்றார். எந்த