சினிமா

அஜித்தின் பிறந்தநாளுக்கு புது படம் ரிலீஸ்!… செம குஷியில் அஜித் ஃபேன்ஸ்!

குட் பேட் அக்லி திரைப்படத்திற்கு பின் மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் ஒரு புதிய படத்தில் நடிப்பதாகவும் அது அஜித்தின் 64வது திரைப்படம் எனவும் சொல்லப்பட்டது.. ஆனால் அதன்பின் அந்த படம் நகரவே இல்லை.. அதற்கு காரணம் அஜித் 185 கோடி சம்பளம் கேட்கிறார். அஜித்தின் மார்க்கெட் நிலவரத்திற்கு அவருக்கு அவ்வளவு சம்பளம் கொடுக்க முடியாது என எல்லா தயாரிப்பாளர்களும் கைவிரித்து விட்டனர். ஆனாலும் அஜித் தன் சம்பளத்தை குறைக்கவில்லை.

ஒருபக்கம் அஜித் தொடர்ந்து கார் ரேஸில் ஈடுபட்டு வந்தார். எனவே அஜித்தின் புதிய படம் எப்போது தொடங்கும் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.. இந்நிலையில்தான் கடந்த சில மாதங்களாக அஜித்தின் கார் ரேஸ் தொடர்பான டாக்குமென்டரி திரைப்படத்தை இயக்குனர் ஏ.எல் விஜய் உருவாக்கி வந்தார்.

முதலில் இதை ஓடிடியில் மட்டுமே வெளியிட முடிவு செய்திருந்தனர். ஆனால் அதன்பின் இதை திரைப்படம் போல உருவாக்கி தியேட்டர்லயே வெளியிடலாம் என்கிற முடிவுக்கு வந்திருக்கிறார்கள். அதோடு இந்த படத்தை வருகிற மே 1ம் தேதி அஜித்தின் பிறந்தநாளுக்கு அவன் ரசிகர்களுக்கு விருந்து போல விருந்தாக வெளியிட திட்டமிட்டிருக்கிறார்களாம்.

அஜித்தின் குட் பேட் அக்லி வெளியாகி ஒரு வருடம் ஆகிவிட்ட நிலையில் இந்த அறிவிப்பு அஜித் ரசிகர்களை குஷிப்படுத்தியிருக்கிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்