உலகம்

போரால் எந்த பிரச்சனையும் வராது!. நாங்க இருக்கோம்!.. டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை..

பொதுவாகவே ஒரு நாட்டில் போர் நடைபெற்றால் அந்த நாட்டோடு வியாபார தொடர்பு வைத்திருக்கும் மற்ற நாடுகளுக்கும் அது பாதிப்பை ஏற்படுத்தும்..தற்போது ஈரான் நாட்டின் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. அந்த நாடு அணு ஆயுதத்தை உற்பத்தி செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தாக்குதல் நடைபெற்று வருகிறது.

இதனால் பல நாடுகளின் வர்த்தகம் பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. ஏற்கனவே வளைகுடா நாடுகளில் விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டுவிட்டது. மேலும், இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது. அதன் காரணமாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும்.. கேஸ் தட்டுப்பாடு ஏற்படும் என செய்திகள் வெளியாகியுள்ளது.

8 நாட்களுக்கு மட்டுமே இந்தியா பெட்ரோல், டீசல் இருப்பு வைத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஏனெனில், உலக நாடுகளுக்கு 20 சதவீத கச்சா எண்ணெயை ஈரான் நாடே கொடுக்கிறாது. போர் காரணமாக கச்சா எண்ணெய்யை கொடுக்கும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் அரசு மூடிவிட்டது.. இதன் காரணமாக மற்ற நாடுகளுக்கு கச்சா எண்ணெய் செல்வது தடுக்கப்படும்.

இந்நிலையில்தான் ‘என்ன நடந்தாலும் சரி.. உலகிற்கான எண்ணெய் வினியோகம் தடையின்றி கிடைப்பதை அமெரிக்கா உறுதி செய்யும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்திருக்கிறார்.. மேலும் ஹார்மூஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல்களுக்கு எங்கள் கடற்படை பாதுகாப்பு அளிக்கவும் தயாராக இருக்கிறது.. அமெரிக்காவின் வலிமை உலகில் மிகப்பெரியது.. உங்களுக்கு இன்னும் பல அதிரடி காத்திருக்கின்றன’ எனவும் டிரம்ப் கூறியிருக்கிறார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம்

அமெரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதி டிக் செனி மறைவு

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் டிக் செனி.(84) இவர் அமெரிக்காவின் 46வது துணை ஜனாதிபதி ஆவார். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இவர் 2001 முதல் 2009-ம்
உலகம்

செய்யாத குற்றத்திற்காக 43 ஆண்டுகள் சிறையில் இருந்த இந்திய வம்சாவளி நபரின் நாடுகடத்தல் நிறுத்திவைப்பு

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 64 வயதான சுப்பிரமணியம் வேதம், தனது நண்பரைக் கொலை செய்ததாக குற்றம்சட்டப்பட்ட வழக்கில் 1980 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்றார். எந்த